கொரோனா 2வது அலை பரவலை தடுக்க 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் ஆங்கில மருந்து, நாட்டு மருந்து கடைகள், பாலகம் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த வரிசையில் ரேஷன் கடைகளும் அடைக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் அத்திவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ரேஷன் கடைகளை இன்று முதல் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது:
இதுபற்றி தமிழக அரசின் உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் வெளியிட் டுள்ள உத்தரவு வருமாறு:
கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கு 24-ந் தேதி (நேற்று) முதல் ஒரு வார காலத்துக்கு எந்தவித தளர்வு களும் இல்லாத முழு ஊரடங்காக நடைமுறைப் படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் இன்றியமை யாப் பண்டங்களாகிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொது வினியோகத் திட்ட பண்டங் களை தொடர்ந்து பெறும் வகையிலும், கொரோனா முதற்கட்ட நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரத்தை இதுவரை பெறாதவர்கள் பெறும் வகை யிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழலிலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் 25-ந் தேதி (இன்று) காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை வினியோகம் செயல்படுத்த பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், உணவுத் துறைப் பணிகளில் ஈடுபடும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்பட அத்தியாவசியப் பணிகளுக்காக பயணிக்க நேரும் அலுவலர்களுக்கு காவல்துறை அனுமதி வழங் கப்படும். ரேஷன் அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரணத்தொகை தடை யின்றி வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை, சீரிய முறையில் எந்தவித தொற்று பாதிப்பு மின்றி செயல்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களும் இத்திட்டத்தை உரிய பாதுகாப்பு முறையில் பயன்படுத்தி முக கவசம் அணிந்து சமூக இடைவெளி யுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடை களில் இருந்து பெற்று செல்ல வேண்டும்.
பொதுமக்களின் நலன் கருதி இந்த தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும். ரேஷன் கடைக்கு செல்லும் போது அதற்குரிய ஆதாரமாக தவறாமல் தங்களுக்குரிய ரேஷன் அட்டையுடன் செல்ல வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
previous post