ரிஷிகபூர் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நடிகர்கள் இரங்கல்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகர் ரிஷி கபூர் நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு மும்பை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். சிகிச்சை பலனில்லாமல் இன்று மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
ரிஷிகபூரின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. சிரித்த முகத்துடன் எப்போதும் காட்சி தரும் அவர் என்றும் சிறந்த ஆளுமை திறம்கொண்டவர். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர் இப்போது உயிருடன் இல்லை என்பதை நம்பாவே கடினமாக உள்ளது. பொழுதுபோக்கு துறைக்கு அவரது மறைவு பெரிய இழப்பு. அவர் ஆன்மா சாந்தி அடைய அனைவரும் வேண்டுவோம். அவர் குடும்பத்தா ருக்கும் நண்பர்களுக்கும் என ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி: பன்முக திறமை, யதார்த்தமான நடிப்பு என்றால் அது ரிஷிகபூர். சோஷியல் மீடியாவில் இருவரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதை அடிக்கடி நினைவு கூர்வேன். இந்திய திரையுலகம் முன்னேற வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவர் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்
ரஜினிகாந்த்:எனது நெருங்கிய நண்பர் ரிஷிகபூர் மரண செய்தி அறிந்ததும் இதயமே உடைந்துவிட்டது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
கமல்ஹாசன்:ரிஷிகபூர் மரணம் அடைந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. சிரித்த முகத்துடன் எப்போதும் காட்சி தருவார். எங்களுக்குள் பரஸ்பரம் அன்பு. மரியாதை எப்போதும் இருந்து வந்தது. உங்களை இழந்துவிட்டேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தி னருக்கு இதயத்திலிருந்து எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.
சரத்குமார்: ரிஷிஜியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். திரையுலகுக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்.
டத்தோ ராதாரவி :
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் இர்பான் கான் மறைவு எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியி ருக்கிறது. கொரோனா ஒருபுறம் உலகையே முடக்கி வைத்து பலி வாங்கிக் கொண்டிருக்க, இத்தகைய சூழலில் இந்த கலைத்துறை சொந்தங்களின் இழப்புகள் என்னை மிகவும் பாதிப்படைய செய்திருக்கிறது.
‘மேரா நாம் ஜோக்கர்’ (1970) என்ற தனது தந்தை ராஜ்கபூரின் திரைப்படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 2000 வரையிலே நாயகனா கவும், அதன்பின் தேர்ந்தெடுத்த சவாலான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான ‘தி பாடி’ திகில் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.
நடிகர் இர்பான் கான் ஹிந்தி சினிமாவில் மட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்க திரைப்படங் களிலும் நடித்து உலகளா விய ரசிகர்களை கொண்டவர். தனது 30 வருட திரை வாழ்வில், தேசிய விருது, ஆசிய விருது, மற்றும் இந்திய அரசின் நான்காவது மிகவும் உயரிய சிவிலியன் விருதான ‘பத்மஸ்ரீ’ விருதையும் வென்ற பெருமைக்குரியவர்.
இத்தகைய சிறந்த கலைஞர்களின், சிறந்த மனிதர்களின் மறைவு என்னில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருந் தாலும், அவர்களது குடும்பங்களுக்கு இந்த சங்கடமான நேரத்தில் நான் ஆறுதல் கூறவும் கடமைப்பட்டிருக் கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்.
#RishiKapoor demise: President and Prime Minister Condolences
#Ramnathgovind #Modi
#rajini #kamal #sarath
#radharavi