மதுரை அழகர்மலை குரங்கு நாய்க்கு பழம், பிஸ்கெட்..
நடிகர் அபிசரவணன் வழங்கினார்..
கொரோனா தொற்று ஊரடங்கால் மதுரை சித்திரை திருவிழா கொண் டாட்டம் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள் ளது. இதனால் மதுரைமேலும் வெறிச்சோடி இருக்கிறது
மதுரை அழகர்மலை வாழ் வானரங்கள் மக்கள் தரும் உணவு வகைகள், பழங்கள் மட்டுமே உண்டு பழக்கப் பட்டவை.ஊரடங்கு காரணமாக கோயில் மூடப்பட்டுள்ளது. இதனால் qவானரங்கள் பசியால் வாடி வருகின்றன
இதுபற்றி நடிகர் அபி சரவணனுக்கு தகவல் கிடைத்தவுடன் தனது நண்பர்கள் பாலகுரு, ராஜ்குமார் ஏகே ரெட்டி மற்றும் ஜெகன் ஆகியோருடன் இணைந்து பழங்கள் மற்றும் காய்கனிகளுடன் அழகர் மலைக்கு சென்று அங்கிருக்கும் வானரங்கள், பசு மற்றும் நாய்களுக்கும் உணவளித்தனர்.
முன்னதாக ஊரடங்கு காரணமாக மதுரை காக்கை பாடினார் பள்ளியில் பாது காக்கப் பட்டு வரும் 200 ஆதரவற்றோர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்கள் வழங்கினர். இந்த ஊரடங்கு முடியும் வரை தன் நண்பர்கள் மூலம் இங்கு வாழும் வாயில்லா பிராணிகளுக்கு உணவளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் அபி சரவணன்.
#abisaravanan feed to azhagarmalai Mankies
#abisaravanan #coronalockdown
#அபிசரவணன்