10,11,12வது வகுப்புகளுக்கு இ -புத்தகம்..
கல்வி துறை மும்முரம்..
கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பள்ளி கள மூடப்பட்டிருக்கின்றன. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. 10 ம் வகுப்பு தேர்வு மட்டும் தள்ளிவைக்கப்பட்டிருக் கிறது
இதற்கிடையில் எல்லா வகுப்புகளுக் கும் இபுத்தகம் இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. அதற்கான பணிகளில் அரசு மும்முரமாக உள்ளது. முதல் கட்டமாக 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிடப்பட உள்ளதாக தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை தெரிவித் துள்ளது. 2 ம் கட்டமாக 9, 8ம் வகுப்பு களுக்கும், பிறகு மற்ற வகுப்புகளுக் கும இ-புத்தகம் வெளியிடப்படும்.
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய் யப்படுவார்கள் என தமிழக பள்ளிக்கல்வி துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
#EBooks For 10th 11th and 12th Classes