Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிச்சைக்காரன் 2 படத்தில் ஆண்டி – பிகிலி தீம் பாடல் வைரல்

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஆண்டி பிகிலி #AntiBikili தீம் பாடல் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 16, 2022 அன்று வெளியிடப்பட்ட இந்த பாடல் டிராக், 24 மணி நேரத்திற்குள் 780K பார்வைகளைப் பெற்றுள்ளது. விஜய் ஆண்டனியின் தத்துவ மேற்கோள்களின் குறிப்போடு பாடல் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து தெருக்களில் பிச்சைக் காரனாக மாறுவேடமிடும் பணக்கார கோடீஸ்வரன் பாத்திரத்தின், நோக்கம் என்ன? என்பதாக காட்டப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ‘பிகிலி எதிர்ப்பு நோக்கம்’. பிகிலி மற்றும் ஆண்டிபிகிலி என்றால் என்ன இது குறித்து பல விசாரணைகள் கிளம்பிய நிலையில், இந்தப் பாடல் பிகிலி என பெயரிடப்பட்ட எண்ணற்ற மனித மண்டை ஓடுகளைக் காட்டுகிறது, எனவே, பிகிலி எதிர்ப்பின் வீர சக்தி என்பதாகவும் மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. இந்த பாடல் உண்மையில் இந்தப்படம் எதைப்பற்றியது என்கிற ஆர்வத்தை தூண்சுடுவதாக இருக்கிறது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான அழுத்தமான கதைகள் கொண்ட வெற்றிப்படங்களை தந்து, ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங் களில் தனக்கென மறுக்கமுடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. குறிப்பாக, சமீபத்தில் திரையுலகில் தனது 6 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய அவரது பிரம்மாண்டமான படைப்பான ‘பிச்சைக்காரன்’ தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு பதிப்பிலும் 144 நாட்களை கடந்து பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தின் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து, ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளும், பரபரப்புகளும் அதிகரித்தன.

தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படத்தொகுப்பு மற்றும் இசையை கையாளும் விஜய் ஆண்டனி முதல் முறையாக இயக்குநராகவும் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். தேவ் கில், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், ராதா ரவி, மன்சூர் அலி கான், ஒய்.ஜி.மகேந்திரன், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் மில்டன் மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

பிச்சைக்காரன் 2 படத்தை விஜய்     ஆண்டனி  பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

Related posts

ஒன்றிணைந்து மாற்றுவோம்: பா.ராஞ்சித்துக்கு உதயநிதி அழைப்பு

Jai Chandran

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம் வெளியீடு

Jai Chandran

Samanthaprabhu2 is going to groove for a sizzling number

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend