வெற்றி பெற்ற படங்கள் பிற மொழியிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றன. அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீ மேக் ஆகும். அந்த வகையில் இந்தியில் வெற்றி பெற்று தேசிய விருதுகள் வென்ற படம் அந்தாதுன்.
இப்படம் தமிழில் ரிமேக் ஆகிறது பிரசாந்த் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து நடிக்கிறார் சிம்ரன். இப்படத்தில் மற்றொரு பிரதான வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் கார்த்திக். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்குகிறார். நடிகர் தியாகராஜன் தயாரிக்கிறார்.