Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

விக்னேஷ் சிவனின் “லவ் பண்ணா உட்றனும்

நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் முக்கிய இயக்குனர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள “லவ் பண்ணா உட்றனும்” பகுதி பலமிக்க பிரபல அரசியல்வாதி ஒருவரின் பெண், தனது சாதியை கடந்து ஒருவரை காதலிக்கும் போது, என்ன நடக்கும் என்பதை சொல்கிறது. இப்பகுதியில் பதம்குமார் அரசியல்வாதி வீரசிம்மன் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது இரட்டை பிறவி மகள்களான ஆதிலக்‌ஷ்மி மற்றும் ஜோதிலக்‌ஷ்மியாக நடிகை அஞ்சலியும், கல்கி கொச்சலினும் நடித்துள்ளார்கள். இவர்களில் ஒரு மகள் தனது தந்தையும் சமூகமும் ஒப்புக்கொள்ளாத ஒருவனோடு காதல் கொள்கிறாள். மேலும் தனது தந்தையின் சம்மதம் பெறவும் முயல்கிறாள். அவளது காதல் அனைத்தையும் கடந்து வெல்லுமா, அல்லது மனித உணர்வுகளை விட ஒருவரின் கௌரவமும், சாதியும் தான் முக்கியமா என்பதே கதை.


“லவ் பண்ணா உட்றனும்” படத்தினை குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது…

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் எளிய உறவு எந்த அளவு சிக்கலுக்குள்ளாகும் என்பதை சொல்ல விரும்பினேன். “லவ் பண்ணா உட்றனும்” படத்தின் கதை ஒரு அரசியல்வாதியின் மகள் தனது தகுதிக்கும், சாதிக்கும் எதிரான ஒருவனை காதலிக்கும் போது என்ன நடக்கும் என்பதை சொல்வதாகும். வாழ்வை பிரதிபலிக்கும் இந்த கதையை மிகப்பிடித்தமான படக்குழுவுடன் உருவாக்கியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. எனது நீண்ட நாள் கனவு இதன் மூலம் நனவாகியுள்ளது.

இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக வெளியிடுகிறது. “பாவக்கதைகள்” திரைப்படம் டிசம்பர் 18, 2020 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது.

Related posts

Mass number From Megastar Chiranjeevi’s To Be Out This Week

Jai Chandran

அரசியல் தலைவர்களுடன் கார்த்தி போஸ்டர் அச்சடிக்க கூடாது: மன்றம் எச்சரிக்கை

Jai Chandran

ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend