Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆல்பாஸ் (பட விமர்சனம் )

படம்: ஆல் பாஸ்

நடிப்பு : துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், ஜனனி, ஜெயபிரகாஷ், செந்தி குமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்னா பாலசந்திரன், மோகனா ஆர், சத்யா, சஞ்சய், கோகுல், நிகில்,  சரத் ரலோகித் ஷவா,  ரோஷன் பஷீர், மூர்த்தி,  கலையரசன் கண்ணுசாமி

தயாரிப்பு:: மோகனா ஆர்

இசை: ஜேம்ஸ் வசந்தன்

ஒளிப்பதிவு : தில் ராஜு

இயக்கம் :மைதீன்.

பிஆர்ஓ : புவன் செல்வராஜ்

கதை: வடசென்னை பகுதி குடியிருப்பில்  மூன்று குடும்பத்தினர் நட்புடன் வாழ்கின்றனர். இவர்களில் அழகர்  (ஜெயபிரகாஷ்) எது சொன்னாலும்  ஒவ்வொருவரும் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். ஒரு சமயம் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் எங்கிருந்தோ 5 கோடி ரூபாய் பணத்தை வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். பணம் திருடு போனதையடுத்து அப்பகுதி எம்எல்ஏ,  பணத்தை யார் திருடி சென்றது என்பதை ஜல்லடை போட்டு தேடுகிறார். இந்நிலையில்  பணத்தை பங்கு போடுவதில் மூன்று குடும்பத்துக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் அவர்களின்   நட்பு பிரிகிறது இதையடுத்து நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ்.

வழக்கமாக வட சென்னை  படமென்றாலே குத்து , வெ ட்டு, கொலை, ஆட் கடத்தல்,  போதை  என்று படங்களில் காட்சிகள் இடம் பெற்று  வடசென்னை என்றாலே   ஒரு அச்ச  உணர்வு ஏற்படும் அளவுக்கு சித்தரித்து வைத்திருக்கிறார்கள்  ஆனால் அதையெல்லாம் உடைக்கும் படமாக வடசென்னையில் இரக்கமுள்ள குடும்பத்தினர்,  பாசமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை சொல்லும் படமாக ஆல் பாஸ் அமைந்திருப்பது கதைக்கு பெரிய பிளஸ்

பெரிய நடிகர்கள் என்றில்லாவிட்டாலும் இருக்கின்ற நடிகர்களே போதும் என்றளவுக்கு இதில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும்  அருமையாக பொறுப்பாக நடித்திருக்கி றார்கள்

வீட்டில் ஒரு பெரியவர் இருப்பார் அவர் சொல்வதைத்தான் அந்த குடும்பத்தினர் பின்பற்றுவார்கள் அப்படி ஒரு கதாபாத்திரம்தான் ஜெயப்பிரகாஷ் ஏற்றிருக்கிறார். பொறுப்பான கதாபாத்திரத்தை பொறுப்பான நடிகரிடம் இயக்குனர் வழங்கி இருப்பது தான் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.

ஐந்து கோடி பணம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அதை எப்படி செலவு செய்வது என்று குடும்பத்தில் உள்ள பெண்கள் திட்டம் போடுவதும்,  அந்த பணத்தை தேடி எம் எல் ஏ அடியாட்களை அனுப்பி இருக்கிறார் என்று தெரிந்ததும் பணத்தை செலவு செய்ய பயந்து படபடப்புடன்  காட்சிகள் நகர்வது சுவாரசியம் ஊட்டுகிறது.

 

ஒரு கட்டத்தில் பணம் பாசமுள்ள மூன்று குடும்பத்தை பிரிக்கும்போது அடுத்து என்ன நிகழுமோ என்ற பதற்றம் பற்றிக் கொண்டு காட்சிகளை  சஸ்பென்ஸ் படம் போலகொண்டு செல்வது பரபரப்பு.

ஹீரோவாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கிறார். நிறைய காட்சிகளில் வராவிட்டாலும் வரும் காட்சிகளில் ஒரு நல்ல பிள்ளையாக மனதில் பதிவது ஹீரோ ஹிசத்திற்குரிய அம்சம் தான்.

கதாநாயகியாக ஜனனி நடித்திருக்கிறார்.

செந்தி குமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்னா பாலச்சந்திரன், மோகனா ஆர், சத்யா, சஞ்சய், கோகுல், நிகில்,  சரத் ரலோகித் ஷவா,  ரோஷன் பஷீர், மூர்த்தி,  கலையரசன் கண்ணுசாமி ஆகிய எல்லோருக்குமே அந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

மோகனா ஆர்  படத்தை தயாரித்திருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் இசை கேட்டு நீண்ட காலம் ஆகிவிட்டாலும் அந்த இனிமையை மீண்டும் இப்படத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்  தில் ராஜு கேமரா காட்சிகளை  தத்ரூபமாக  படமாக்கி இருக்கிறது

இயக்குனர் மைதீன்  இப்படி ஒரு படத்தை இயக்குவதற்கு பெருமைபட்டுக் கொள்ளலாம்.  பணத்தைவிட  நட்பும் பாசமும் தான் பெரிது என்பதை ஆணி அடித்தார் போல் சொல்லி இருக்கிறார்.

ஆல் பாஸ்  –  குடும்பங்களின் நெகழ்ச்சி.

Review by K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

Related posts

விக்ரமின் வீர தீர சூரன் ரிலீஸ் தேதி

Jai Chandran

நெட்ஃபிலிக்சில் ஆறு ஒரிஜினல் கதை அறிவிப்பு

Jai Chandran

மாஸ்க் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend