பாடலாசிரியர், எழுத்தாளர் கபிலன்வைரமுத்து எழுதிய அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு வெளி யான முதல் மாதத்திலேயே ஆயிரம் பிரதிகள் விற்பனை யைக் கடந்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் நாள் வெளியான இந்த நூல் பல்வேறு தரப்பினரின் வரவேற்பைப் பெற்றிருக் கிறது.
இது குறித்து பதிப்பாளர் வேடியப்பன் கூறுகையில் “பதிப்பாளர் என்ற முறையில் இரண்டு வகையில் எனக்கு இது வியப்பளிக்கிறது. ஒன்று இன்றைய தமிழ் வாசிப்பு சூழலில் ஒரு புனைவிலக் கியம் ஆயிரம் பிரதிகள் விற்பனை என்பது அதுவும் ஒரு மாதகாலத்தில் என்பது. மற்றொன்று கொரோனா பேரிடர் காலத்தில் ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட வகை யில் பொருளாதார நெருக்கடி கள் உள்ள சூழலில் இந்த விற்பனை நம்பிக்கை அளிக் கிறது” என்று கூறியிருக்கிறார். கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் இலக்கிய விமர்சகருமான அ.ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் என பல துறையைச் சேர்ந்தவர் கள் தங்களுடைய வலைப் பக்கங்களில் அம்பறாத்தூணி குறித்த தங்கள் விமர்சனங் களையும் பாராட்டையும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.