தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2021-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. என்.முரளி நராயணன் தலைவராக வெற்றி பெற்றார். துணை தலைவர்கள், செயலாளர்கள்,
பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தமிழக செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றி சான்றிதழ் அளிக்கும் விழா இன்று டிசம்பர் 2ம் தேதி காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடந்தது.
விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட என். முரளி ராமநாராயனனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
அவரை தொடர்ந்து மற்ற நிர்வாகிகளுக்கும் அமைச்சர் சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு சங்க தலைவர் என். முரளி நினைவு பரிசு வழங்கினார். விழாவில் புதிதாக தேர்வான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.தயாரிப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்