Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மதுரை வாழ்வியல் கதையில் நடிக்கும் கன்னிகா

மதுரை மதுரை வாழ்வியலை சொல்லும் மற்றொரு கதை திரைப் படமாக உருவாகிறது
டாக்டர் எஸ்.கேதார்நாத் சிவோம் புரடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப் படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. பெண் களுடைய வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் முருகா னந்ததிடம் உதவி இயக்குன ராக பணியாற்றிய சந்தோஷ் பிரபாகரன் இயக்கவுள்ளார்.
கதையின் நாயகர்களாக இல்லாமல் முக்கிய கதாபாத்தி ரங்களாக நான்கு நாயகர்கள் களமிறங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் களம் நாயகன் மற்றும் நாயகியை சார்ந்து இல்லாமல் கதாபாத்திரங் களின் வாழ்க்கையை மற்றும் மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தியும், பெண்கள் புரியும் சமூக சீர்திருத்ததை மையப்படுத்தியுமே உருவாக் கப்பட்டுள்ளது.
கதையின் நாயகியாக கன்னிகா களமிறங்குகிறார். இவர் ஏற்கனவே பல திரைப்படங் களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அழகான மதுரை மாநகரை சார்ந்த பின்னணியில் உருவாக உள்ள இந்த படத்தில் பல புதுமுக நடிகர் நடிகைகள் இணைந்துள் ளார்.
நாடோடிகள், தூங்காநகரம், அஞ்சாதே போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த சுந்தர் சி பாபு அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கணேசபுரம், கல்தா போன்ற படங்களில் பணியாற்றிய வாசு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும் சீனு ராமசாமி மற்றும் பிரபு சாலமன் போன்ற முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றிய விஜய் தென்னரசு கலை வடிவமைப் பாளராக தனது பங்கினை அளிக்கவுள்ளார். இந்த படம் பூஜையுடன் இனிதே படப்பிடிப்பு தொடங்கப் பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் 1, 30, 261 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Jai Chandran

விஜய் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போவதால் ஆடை இயக்குனர் வருத்தம்..

Jai Chandran

விஜய்சேதுபதி மகளுடன் நடிக்கும் ’முகிழ்’ வெப் திரைப்படம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend