நடிகர் உதயா எழுதி இயக்கிய “செக்யூரிட்டி” குறும்படம் ராணுவ வீரர்களின் பெருமையை உணர்த்தும் குறும்படமாக உருவாக்கப்பட்டது… பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது, அதனடிப்படையில் குடியரசு தினத்தன்று போர்க்களத்தில் சண்டையிடும் போது வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ” பரம்வீர் சக்ரா “விருதினை இவ்வருடம் குடியரசு தினத்தன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அவில்தார் பழனிக்கு இவ்விருதினை வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்..
பிரதமருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் நகலை தமிழ் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், முனைவர் எல் முருகனிடம் இன்று வழங்கினார்.