Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பிரபாஸ்-கே ஜி எப் பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’ ஹொம்பாளே பிலிம்ஸ் பிரம்மாண்ட படைப்பு

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது ‘யுவரத்னா’ மற்றும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.
ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ‘டார்லிங்’ பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம் நம்மை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது.


தற்போது ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்துவிட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகண்தூர் கூறுகையில் “ஆம்! அது உண்மைதான்!! ‘டார்லிங்’ பிரபாஸ் மற்றும் பிரஷான்த் நீல் இருவரையும் இந்த மிகப்பெரிய படத்தில் இணைப்பதில் மிகுந்து மகிழ்ச்சியடைகிறேன்,
ஹொம்பாளே பிலிம்ஸ் தங்கள் முதல் படத்தில் இருந்தே சினிமாத் துறையில் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கி வருகிறது. ”சலார் ‘ படத்தை நாடு முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தயாரிப்பின் மூலம் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது ஹொம்பாளே பிலிம்ஸ். இதுவரை இந்தியத் திரையுலகில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும், 2 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட்டதில்லை. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் – பிரஷான்த் நீல் படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்திய அளவில் அடுத்ததொரு பிரம்மாண்ட படைப்பு ரசிகர்களின் விருந்துக்காகத் தயாராகவுள்ளது.

Related posts

பாலகிருஷ்ணா நடிக்கும் பட டைட்டில் வெளியாகும் தேதி அறிவிப்பு

Jai Chandran

Blood Money teaser out now!

Jai Chandran

Actor Pugazh starrer ‘Mr. Zoo Keeper’ Audio Launch

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend