ஜோதிகாவுக்கு விஜய்சேதுபதி ஆதரவா?
தஞ்சை பெரிய கோவில் பற்றி நடிகை ஜோதிகா விழா ஒன்றில் கடுமையாக விமர்சித்து பேசியதாக நெட்டில் பரபரப்பாக செய்தி வந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி டிவிட்டரில் ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்து மெசேஜ் வெளியிட்டதாக ஒரு தகவல் வெளியானது, அதில் ’ஜோதிகா துணிச்சலாக பேசியுள்ளார். அவருக்கு பிரச்னை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் விரைவில் மருத்துவமனைகளாக மாறும் காலம் நெருங்கி விட்டது’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது..
இதை விஜய்சேதுபதி மறுத்துள்ளார். போலியாக யாரோ இப்படி விஜய்சேதுபதி பெயரில் வெளியிட் டிருப்பதாக அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.
#Vijay Sethupathi’s Fake Account Supports Jyothika
#விஜய்சேதுபதி #ஜோதிகா