படம்: சைக்கோ
நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி. நித்யாமேனன், ராஜ்குமார். சிங்கம் புலி, ராம், ரேணுகா, குமரன், பிரீதம், பாவா செல்லதுரை, ஷாஜி.
இசை:இளையராஜா
தயாரிப்பு: டபுள் மீனிங் புரொடக்ஷன்
ஒளிப்பதிவு:தன்வீர் மிர்
இயக்குனர்:மிஸ்கின்
கண்பார்வையற்ற உதயநிதி ரேடியோ ஜாக்கி யான அதிதியை காதலிக்கிறார். அது ஒருதலை யாக காதலாக இருக்கிறது. ஒரு சமயம் இரு வரும் தங்கள் காதலை பகிர எண்ணும்போது திடீரென்று அதிதி கடத்தப்படுகிறார். ஏற்கெனவே பல பெண்கள் மர்மமான முறையில் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் அதிதியும் கடத்தப்பட்டதை எண்ணி அதிர்கிறார் உதயநிதி. கடத்தப்படும் பெண்கள் தலையை வெட்டி உடலை மட்டும் வீசுவதால் இதை செய்வது ஒரு சைக்கோவாகத்தான் இருக்க முடியும் என்பது தெரிகிறது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ராம் தீவிரமாக ஒரு பக்கம் விசாரிக்க மற்றொரு புறம் அதிதியை உதயநிதி தேடுகிறார். அதற்காக நித்யா மேனனின் உதவியை நாடுகிறார். கடத்தப்பட்ட அதிதி யை சைக்கோ கொலையாளியிடமிருந்து உயிருடன் உதயநிதி மீட்கிறாரா? ஈவு இரக்க மற்ற அந்த சைக்கோ கொலையாளி யார்? பெண்களை கடத்தி கொடூரமாக கொல்வது ஏன் என்ற பல கேள்விகளுக்கு திகிலுடன் பதில் அளிக்கிறது படம்.
இதுவரை காதல் பிளஸ் காமெடி நாயகனான உதயநிதியை பார்த்த கண்கள் இப்படத்தில் கண்பார்வையற்ற நாயகனாக காண்பதே முதல் புதுமை. கண்களை திறந்துகொண்டு எளிதாக நடித்துவிடலாம் பார்வையாற்றவராக நடிப்பது சவாலான விஷயம் அதை செவ்வனே செய்திருக்கிறார் உதயநிதி. பார்வையற்றவர்கள் எப்படி அருகில் இருப்பவரை உணர்கிறார்கள். கையில் வைத்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையெல்லாம் ரொம்பவும் பெர்பெக்ட்டாக செய்து நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் உதயநிதி. கதாபாதிரத் துக்கு ஏற்ப அவர் காட்டும் பாடிலேங்குவேஞ் வேடத்தை தூக்கி நிறுத்துகிறது.
அதிதிராவ் வேடம் நிறைவு. சக்கர நாற்காலி யில் இருக்கும் நித்யாமேனன் நடிப்பு தடாலடி. வாயாடி வாயாடி என்று சொல்லவைப்பதுடன் கெட்ட வார்த்தைகள் பேசி ஷாக் தருகிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். உதயநிதியுடனே வரும் சிங்கம் புலி அவரது கண்ணாக செயல்பட்டி ருக்கிறார். சைகோவாக வரும் ராஜ்குமார் மிரள வைக்கிறார். போலீஸ் அதிகாரி ராமின் கொலை காட்சி கண்களை மூடிக்கொள்ளச் செய்கிறது.
இயக்குனர் மிஷ்கின் வித்தியாசமான படங்களை தருபர்தான் ஆனால் சைக்கோவை குலை நடுங்கவைக்கும் படமாக தந்திருக்கி றார்.
ஆர்ப்பட்டம், கொடூரம் கொலை என்று படம் முழுவதும் ரத்த ஆறு ஓடினாலும் அதற்குள்ளும் தன்னை யாரும் அழுத்திவிட் முடியாமல் எழுந்து நிற்கிறார் இளையராஜா. மீண்டும் வந்துவிட்டார் யெய்ட்டீஸ் இளையராஜா என இன்றைய யூத்களை குரலெழுப்ப வைக்கிறார். உன்னை நினச்சி.. தூங்க முடியுமா .. இரண்டு பாடல்களுமே ஏற்கெனவே ஹிட் என்பதால் அந்த ராகம் தொடங்கும்போதே அரங்கில் அமைதியும் விரல்களில் தாளமும் பரவத்தொடங்கி விடுகிறது. தன்வீர் மிரின் ஒளிப்பதிவு கனகச்சிதம்.
சைக்கோ- தைரியமானவர்களுக்கு மட்டும்.
previous post
next post
CCCinema
I am a web developer who is working as a freelancer. I am living in Saigon, a crowded city of Vietnam. I am promoting for http://sneeit.com.