Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மகான் (பட விமர்சனம்)

படம்: மகான்

நடிப்பு: விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன், சனந்த், முத்துக்குமார், தீபக் பரமேஷ், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், கஜராஜ்

தயாரிப்பு: எஸ்.எஸ்.லலித்குமார்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்

ரிலீஸ்: பிரைம் வீடியோ

பி ஆர் ஒ: யுவராஜ்

காந்தியடிகளின் மது ஒழிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கு சென்ற குடும்பத்தை சேர்ந்த தியாகி மோகன்தாஸ் (நரேன்). தனது மகனுக்கு காந்தி மகான் (விக்ரம்) என பெயர் சூட்டுகிறார். சிறுவயதில் சக நண்பர்களோடு சேர்ந்து சூதாடி சண்டை போடுகிறார் காந்தி. அதை கண்டிக்கும் தந்தை நரேன், காந்தி மகான் போல் ஒரு மகானாக வாழ வேண்டும் என்று கண்டிக்கிறார். அதன்படி  கெட்டப் பழக்கம் எதுவும்  இல்லாமல் வாழ்கிறார். மனைவி, குழந்தை என குடும்பஸ்த்தராகி ஆசிரியராக பணியாற்றுகிறார் காந்தி. ஆசை அடக்க முடியாத நிலையில் ஒரு நாள் பாரில் சென்று குடித்துவிட்டு வீடு திரும்புகிறார். அப்போது சிறுவயது நண்பன் சத்தியவானை சந்திக்கிறார். சாராயம் தயாரிக்கும் தொழில் நடத்தும் சத்தியவான், நண்பர் காந்தியை அவரது வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார். காந்தி  குடிந்துவிட்டு வந்திருப்பதை அறிந்த அவரது மனைவி இதற்கு சத்தியவான் தான் காரணம் என்று அவரை கன்னத்தில் அறைகிறார். நண்பனை அறைந்த மனைவியை  கன்னத்தில் அறைகிறார் காந்தி. இதில் கோபம் அடைந்த மனைவி தன் மகனை அழைத்துக்கொண்டு காந்தியை விட்டு பிரிந்து செல்கிறார். அதன்பிறகு காந்தியின் வாழ்க்கை பாதை திசை மாறுகிறது,. சத்தியவானுடன் சேர்ந்து சாராய கடை நடத்தி கோடி கோடியாக சம்பாதிக்கிறார். மனைவி, மகனை பிரிந்த துக்கத்தில் இருக்கும் காந்திக்கு அவர்கள் ஞாபகம் வருகிறது. அப்போது காந்தியின் கண்முன் சிறப்பு  படை போலீஸ் அதிகாரியாக வந்து நிற்கிறான் மகன். தந்தையோ குடிபோதைக்கு அடிமையாக இருக்க அவரது நண்பர்களை மகன் என்கவுண்ட்டர் செயகிறான். ஒரு கட்டத்தில் சத்தியவான் தன் மகனையே பறிகொடுத்த வேதனையில் கதறுகிறார்  மகனை கொன்றவனை பழிவாங்குவேன் என்று சத்தியவான் சபதம் செய்ய தன் மகனை எப்படியாவது காப்பாற்ற எண்ணுகிறார் காந்தி இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு தீமையை அறுத்து பதில் சொல்கிறது படம்.

ஒரு விக்ரம் இருந்தாலே அரங்கம் அதிரும் அளவுக்கு ஆக்‌ஷன் களைகட்டும் இதில் விக்ரமின் வாரிசு மகன் துருவ் விக்ரமும் தந்தையுடன் சேர்ந்து அதிரிபுரியாக நடித்து கரவொலிகளை அள்ளுகிறார்.

பள்ளி ஆசிரியாக அப்பாவித்தனமாக வரும் விக்ரம்  பாருக்கு சென்று  குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் தான் குடிக்கவே இல்லை என்று மனைவி சிம்ரனிடம் சொல்வதும் பிறகு குட்டு வெளிப்பட்டு அவரிடமிருந்து மகனை அழைத்துக்கொண்டு சிம்ரன் பிரிந்து செல்வதும் அதன்பிறகு விக்ரம் முற்றிலுமாக மாறி சாராய ஆலை பார்ட்னராக சின்ஹாவுடன் இணைந்து  அடிக்கும் கூத்தும் கும்மாளமும் காட்சிகளை வேகமாக நகர்த்தி செல்கிறது.

அம்மன் திருவிழாவில் மகன் துருவ் தன் கண்முன் வந்து நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு திருவிழாவில் விக்ரம் ஆவேச நடனம் ஆடுவதும்  அதேபோல் அங்கு வரும் துருவ்வும் ஆக்ரோஷமாக விக்ரமுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆட்டம்போடும்போது இருவரின் நடிப்பு தாண்டவம் மிரள வைக்கிறது.

”அப்பா, உன்னை தவிர உன் கூட இருக்கும் அவ்வளவு பேரையும் சுட்டுக்கொல்வேன்” என்று அசால்ட்டாக துருவ் விக்ரம் பேசும்போது அவரை விக்ரம் சமாதானம் செய்ய முய;ல்வதும் அதற்கு  மசியாமல் ஒவ்வொருவரையாக குருவி சுடுவதுபோல் துருவ் சுட்டு என்கவுன்ட்டர் செய்வது பரபரப்பு.

சிம்ஹா மகன் விக்ரமை அழைத்துக்கொண்டு துருவ்விடம் சமாதானம் பேச வரும்போது அதை ஏற்காத துருவ் கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்ஹா மகனை சுட்டுவீழ்த்தியதும்  அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அதற்க்கு தகுந்தார்போல் விக்ரம் அங்கிருக்கும் அதிகாரிகளை மின்னல் வேகத்தில் சுட்டு வீழ்த்திவிட்டு துருவையும் அடித்து துவம்சம் செய்வது எதிர்பாராத ஆக்‌ஷன் சீன்.

சிம்ஹா மகனை துருவ் சுடும்போது அருகில் விக்ரம் இருப்பதை வீடியோவில் கவனிக்கும் சிம்ஹா, விக்ரமை அடித்துவீழ்த்தி ஆத்திரத்தை வெளிப்படுத்துவதும் தனது மனசாட்சி உறுத்தியநிலையில் சிம்ஹாவின் தாக்குதலை தாங்கிக்கொள்ளும் விக்ரம் மகன் துருவை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கெஞ்சும்போது தந்தை பாசத்தை கண்கலங்க வெளிப்படுத்துகிறார்.

தந்தை விக்ரமும், மகன் துருவும் இணைந்து போட்டி நடிப்பை வெளியிட்டு மிரள வைக்கின்றனர். முதன்முறையாக தந்தையுடன் இணைந்து நடித்திருக்கிறார். துருவ் விக்ரம் என்ற நடிப்பு அரக்கனுடன் அவருக்கு ஈடுகொடுத்து துருவ் நடித்திருப்பது  புலிக்கு பிறந்தது பூனை அல்ல என்பதை நிருபித்திருப்பதுடன் இனி சோலோவாக கோலிவுட்டில் தன்னால் எந்த பாத்திரத்தையும் ஏற்க முடியும் என்பதை உணர்த்துகிறார்.

அச்சு அசலாக இளவயது விக்ரம்போலவே பல காட்சிகளில் துருவ் தோற்றம் வெளிப்பட்டிருப்பது இரட்டை வேடத்தில் விக்ரம்தான் நடிக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பிவிடுகிறது.

விக்ரமின் மனைவியாக சிம்ரன் காந்திய கொள்கைகளுடன் வாழ்க்கையை நடத்துவதும் குடித்துவிட்டு வந்துவிட்டார் என்பதற்காக விக்ரமைவிட்டு அவர் பிரிந்து செல்வதும் காந்திய கொள்கையில் அவரது குடும்பத்தினர் எவ்வளவு உறுதியாக இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

அகிம்சை, கோபம் என எந்த கொள்கையும் அளவுடன் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை உணர்த்தும் விதத்தில் 60கள், 90கள், 2000ம் என 3 காலகட்டங்களாக கதையை வடிவமைத்து ஒரு படிப்பினை படமாக தந்திருக்கிறார்  இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

எஸ் எஸ்.லலித்குமார் தயாரித்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசை மக்களிசை பாடல்களுக்கு மவுசு சேர்த்திருக்கிறது.

சிரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு தெளிவு.

இப்படம் பிரைம் வீடியோ ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

மகான் – காலச் சூழல் மாற்றத்தின் பிரதிபலிப்பு.

By

ஜெயச்சந்திரன்

 

 

Related posts

விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதிஸ்டாலின்

Jai Chandran

மாதவன் ஷ்ரத்தா நடிக்கும் மாறா ரிலீஸ் தேதி

Jai Chandran

டொரன்டோ விழாவில் விருது வென்ற ‘மாயோன்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend