படம்: கால்ஸ்
நடிப்பு: மறைந்த வி ஜே. சித்ரா, தேவதர்ஷினி, வினோதினி, ஆர்.சுந்தராஜன்,
இசை தமீம் அன்சாரி
ஓளிப்பதிவு சபரீஸ் எம்
இயக்குனர் சபரீஸ் எம்
சில மாதங்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட டிவி நடிகை வி ஜே சித்ரா மறைவதற்கு முன் நடித்த படம் கால்ஸ்.
சென்னையில் உள்ள கால் சென்டர் ஒன்றில் பணியாற்றுகிறார் சித்ரா. இவர் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர். அதுவே அவர் வேலை செய்யும் இடத்தில் போன் மூலம் தொடர்கிறது. இதனால் மனச்சோர்வு அடைந்து வேலையில் கவனம் செலுத்து முடியாமல் தவிக்கிறார். அவரை எப்படியாவது வேலையைவிட்டு அனுப்பிவிட்டு அந்த வேலை யை தனக்கு தெரிந்த பெண் ணுக்கு தர எண்ணுகிறார் நிறுவன அதிகாரி. கால் சென்டரிலிருந்து சித்ரா தொடர்புகொள்ளும்போது அவருக்கு பதில் அளிக்காத வாடிகையாளர்களால் சித்ரா மேலதி காரியின் கோபத்துக் குள்ளாகிறார். இந்நிலையில் ஊரில் சில மர்ம கொலைகள் அரங்கேறுகிறது. இந்த பிரச் னைகளுக்கு தீர்வு கிளை மாக்ஸ்.
இயக்குனர் சபரீஸ் எம் பலவேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார். கதையில் கூடுதல் கிளைக்க தைகளை கோர்த்துக்கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார். சொல்லப்பட்ட சம்பவங்கள் நன்றாக இருந்தாலும் அதில் பலவற்றுக்கு தீர்வு சொல்ல வில்லையே என்ற உணர்வு ஏற்படுகிறது.
சித்ரா நடிப்புக்கு புதிதில்லை என்பதால் அவரால் எல்லா காட்சிகளையும் உள்வாங்கி அதற்கேற்ற ரியாக்ஷன் தந்தி ருக்கிறார், வேலை பயம், யாரும் தனது அழைப்புக்கு சரியாக பதில் அளிக்கவில் லையே என்ற சலிப்பு என பலவித பாவனைகளையும் துல்லியமாக செய்திருக்கிறார்.
படத்தில் பலருக்கு கால்ஸ் செய்யும் சித்ராவுக்கு நிஜத்தில் எமன் கால் செய்தபோது இவர் ஏன் ரெஸ்பான்ஸ் செய்தார் என்ற ஒரு சோகமும் அவரை ஒவ்வொரு காட்சிகளில் பார்க்கும்போதும் ஏற்படு கிறது.
கால் சென்டர் வாட்ச்மேனாக வருகிறார் ஆர்,சுந்தரராஜன். தேவதர்ஷினி, வினோதினி போன்றவர்களை சரியாக பயன்படுத்தி இருக்கலாம். எழுத்து, இயக்கம், ஒளிப் பதிவு என பல பொறுப்பு களை ஏற்றுக் கொண்டிருக்கும் சபரீஸ் எம். உழைப்பை அதிகம் கொடுத்திருந்தாலும் அது பல இடங்களில் விழலுக்கு இறைத்த நீர் ஆகி இருக்கிறது.
கதையை சரியாக செய்திவர் ஒவ்வொன்றுக்கும் பதில் தர மறந்திருக்கிறார். இந்த கொரோனா காலகட்டத்திலும் படம் தியேட்டரில் வெளி யாகும் அளவுக்கு செய்த இயக்குனரின் முயற்சி பாராட்டுக்குரியது.
தமீம் அன்சாரி இசை காட்சி களுக்கு கைகொடுத்திருக் கிறது.
கால்ஸ்- பெண்ணின் மனப் போராட்டம்.