சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடம் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையானார். இதற்கிடையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிசை பெற்று குணம் அடைந்தார். விடுத்லையான பிறகு பெங்களுருலேயே சில நாட்கள் பண்ணை வீட்டில் தங்கி இருந்தார் கடந்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி சென்னை வந்தார். சசிகலா. அவருக்கு ஆதரவாளர்கள் பிரமண்ட வரவேற்பு அளித்தனர். பிறகு சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார சசிகலா,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி கடந்த மாதம் 24-ந்தேதி தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய சசிகலா, ‘தமிழக மக்கள், தொண்டர்களின் வேண்டுதலால் நலம் பெற்று திரும்பியிருக்கிறேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களையும் சந்திக்க நான் வருவேன்’ என்றார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் நேற்று இரவு திடீர் அறிக்கை வெளியிட்டு அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இது அவரது ஆதரவாலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: