படம்: மிருகா
நடிப்பு: ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, தேவ் கில், நைரா, வைஷ்ணவி, சந்திரமோகன், த்விதா, பிளாக் பாண்டி,
தயாரிப்பு: ஜாகுவார் ஸ்டுடியோஸ் பி.வினோத் ஜெயின்
இசை: அருள்தேவ்
கதை, திரைக் கதை: எம்.வி.பன்னீர்செல்வம்
ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர் செல்வம்
இயக்கம்: ஜே.பார்த்திபன்
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கணவர் இல்லா மல் குழந்தையுடன் வசிக்கும் பணக்கார பெண்களை குறி வைத்து அவர்களிடம் பழகி அந்த பெண்ணை மணந்துக் கொண்டு சில மாதங்கள் கழித்து அவர்களை கொன்று விட்டு பணம் நகைகளை கொள்ளையடித்து செல்வது ஸ்ரீகாந்த்தின் குணம். அதே நோக்கத்துடன் ராய் லட்சுமி யின் பங்களாவுக்குள் நுழைகி றார். கணவரை விபத்தில் பறிகொடுத்துவிட்டு குழந்தை யுடன் வசிக்கிறார் ராய் லட்சுமி. அவரிடம் நல்ல விதமாக பழகி அவர் மனதில் இடம் பிடித்து அவரை திருமணம் செய்துகொள்கிறார் ஸ்ரீகாந்த். அந்த பகுதியில் ஒரு காட்டுபுலியின் அட்டகாசம் தொடர்கிறது. பலர் புலிக்கு இறையாகிறார்கள். ராய் லட்சுமியின் கணவரான பிறகும் அவரது பல கோடி சொத்துக்களை அடைய ஸ்ரீகாந்த் முயற்சிக்கிறார். அவரது எண்ணம் பலித்ததா? புலி என்னவானது என்பதற்கு படம் விடை சொல்கிறது.
திரையுலகில் 90கள் தொடங்கி கேமராவில் சாதனைகள் புரிந்து வருபவர் ஒளிப்பதி வாளர் எம்.வி.பன்னீர் செல் வம். மிருகா படத்தை ஒளிப் பதிவு செய்திருப்பதுடன் கதை திரைக்கதையும் எழுதி புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
சாக்லெட் பாயாக காலமெல் லாம் வந்துக்கொண்டிருந்த ஸ்ரீகாந்த் ஆக்ஷன் தளத்தில் குதித்திருக்கிறார். வில்லன் கலந்த ஹீரோ வேடம். அடித்து துவம்சம் செய்திருக் கிறார்.
தொடக்க காட்சியிலிருந்தே அவரது வில்லத்தனம் தொடங் கிவிடுவது அரங்கில் பதற்றத் தை படர விடுகிறது. தன்னை தட்டிக்கேட்கும் மனைவியை கழுத்தை நெறித்து கொல்வ துடன் அவரது தாய் மற்றும் குழந்தை என எல்லோரையும் சாகடித்து வெடிகுண்டு வைத்து பங்களாவை தகர்ப் பதில் தொடங்கி கடைசி வரை வில்லனாக வாழ்ந்திருக்கிறார் ஸ்ரீகாந்த். வில்லன மனம் திருந்தி நல்லவனாவதற்கெல் லாம் இந்த கதாபாத்திரத்தில் இடமில்லை என்று வரையறுத்திருப்பது சரியான முடிவு.
ராய்லட்சுமியின் கம்பெனிக்கு வந்து அவரிடம் நேரடியா கவே, ’பெண் பார்க்க வந்தி ருக்கிறேன்’ என்று சொல்லி ஷாக் கொடுப்பது அடுத்த டுத்து சம்பவங்களை உருவாக்கி அவர் வாயாலேயே ஐ லவ் யூ சொல்ல வைப்பது போன்ற புத்திசாலினங்களில் கவனமாக இருக்கும் ஸ்ரீகாந்த் அப்பாவித்தனமும், வில்லத்த னமுமாக நடிப்பை கொட்டி இருக்கிறார்.
ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொள்ளும் ராய் லட்சுமி அவர் மீது முழு நம்பிக்கை வைக்கா மல் பாசங்கு பண்ணுவதும் ஸ்ரீகாந்த் ஒரு கொலைகாரன் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைவதுமாக நடிப்பை தக்க வைத்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த்தை பிளாக்மைல் செய்யும் ராய் லட்சுமியின் தங்கையாக நடித்தவரும், ஸ்ரீகாந்த் கையெழுட்திட்ட செக்கை வைத்துக்கொண்டு அவரை மிரட்டுவதுமாக டபுள் வில்லிகள் அரங்கேறுகின் றனர்,
படத்தில் கிளைமாக்ஸ் காட்சி நீண்ட நேரம் படமாக்கப்பட் டிருந்தாலும் ராய் லட்சுமி பங்ளாவுக்குள் புலி புகுந்தத் தும் நடக்கும் திகில் துரத்தல் கள் எதிர் கொள்ளும் த்ரில் லாக படமாக்கப்பட்டிருக் கிறது. ராய் லட்சுமியின் கடுமையான உழைப்பும் சபாஷ்போட வைக்கிறது.
இசையால் காட்சியை விறுவிறுப்பாக்கி இருக்கிறார் அருள்தேவ்.
கமர்ஷியல் ஸ்கிரிப்ட்டில் புலியையும் சேர்த்து சூப்பர் ஸ்பெஷல் ஆக்கி இருக்கும் எம்.வி.பன்னீர்செல்வம் படத் துக்கு பெரும் தூணாக நின்றி ருக்கிறார்.
இயக்குனர் பாலாவிடம் ’நான் கடவுள்’ படத்தில் பணியாற்றிய இயக்குனர் பார்த்திபன் படத்தை த்ரில், கிரைம், ஆக்ஷன் சென்ட்டி மென்ட் என மல்ட்டி மிக்ஸ் கலவையாக இயக்கி இருக்கிறார்.
மிருகா- மிரட்டல்.