ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” இணைய தொடர், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது !
இயக்குநர் மணிரத்னதிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா வி இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இனிமையான தொடர் “அனந்தம்”. இது 1964 – 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த , உணர்ச்சிகர மான தருணங்களை, பொழுதுபோக்கு டன் தரும் ஒரு அழகான இணைய தொடராகும். ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது, அவர் ‘ஆனந்தம்’ என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின், ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் கதை.
இந்த தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
ஹேப்பி யூனிகார்ன் சார்பில் வி முரளி ராமன் தயாரிக்க, ஆனந்தம் தொடரில் இயக்குனர் ப்ரியா வி பல பணிகளை செய்துள்ளார். திரைக்கதை, எழுத்து மற்றும் வசனங்களுடன், எட்டு எபிசோடுகள் முழுவதும் ஒரு தடையற்ற கதையைச் சொல்லி அசத்தியுள்ளார் இயக்குனர் ப்ரியா வி.
திரைக்கதை ப்ரியா வி, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் & ரீமா ரவிச்சந்தர். எழுத்தாளர் பிரியா வி. வசனங்கள் – ப்ரியா வி & ராகவ் மிர்தாத். ஒளிப்பதிவு பகத்.. தயாரிப்பு வடிவமைப்பாளர் சூர்யா ராஜீவன். இசை ஏ.எஸ்.ராம்.. எடிட்டர் – சதீஷ் சூர்யா.
ஒரிஜினல் தொடர்கள் எனும்போது, ஓடிடி பார்வையாளர்களின் முக்கிய தேர்வாக ஜீ5 விளங்குகிறது. ஜீ5ல் வெளியான விலங்கு இணைய தொடர், முதல் நீ முடிவும் நீ படம் உட்பட அனைத்தும் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ஜீ5 இல் வெளியான ஒரு வாரத்திற்குள் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டி உலகளாவிய பிளாக்பஸ்டர் சாதனை படைத்துள்ளது. இப்படம் தமிழ் / தெலுங்கு / கன்னடம் / இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. 12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ தியேட்டர் நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், என ஜீ5 ஆனது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது. இப்போது, ஜீ5 ஆண்டு சந்தா ரூ. சிறப்பு விலையில் கிடைக்கிறது. 599/- மட்டுமே!