Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கடைசீல பிரியாணி (பட விமர்சனம்)

படம்: கடைசீல பிரியாணி

நடிப்பு: வசந்த் செல்வம், ஹக்கிம் ஷா, விஜய் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்

தயாரிப்பு: எஸ். சசிகாந்த் & சக்ரவர்த்தி ராமச்சந்திரா

பின்னணி இசை: வினோத் தணிகாசலம்.

ஒளிப்பதிவு:   அஜீம் மொஹம்மத்,  ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப்.

இயக்கம்: நிஷாந்த் கலிதிண்டி

ரிலீஸ்: ஒய் நாட் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு  நிகில்.

 

தந்தையை கொலை செய்த ஒருவனை கொலை செய்ய அண்ணன், தம்பி என 3 பேர் கேரளா செல்கின்றனர். காட்டுப்பகுதியில் உள்ள  தனி  வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் கொலையாளியை  3 பேரும் கடத்தி வந்து கொன்றுவிட்டு தப்பிக்கின்றனர். தந்தை கொல்லப்பட்ட விஷயம் அவரது மகனுக்கு தெரிய வருகிறது. பெரிய ரவுடியான அவன் கொலையாளி களை ட்போலீஸ் உதவியுடன் துரத்தி பிடித்து அவர்களை கொல்ல முடிவு செய்கிறான். இறுதியில் நடப்பது என்ன என்பதை பல்வேறு எதிர்பாரத திருப்பங்களுடன் படம் விளக்குகிறது.

கதை என்னவோ பழிவாங்கும் கதைதான் ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம் மாறுபட்ட திரைக்கதையுடன் அமைத்திருக் கிறார் இயக்குனர்  நிஷாந்த் கலிதிண்டி

கதையை காட்சிகளாக விரிந்தாலும்  பின்னணியில் அவ்வப்போது கதை பற்றிய விவரங்களை நடிகர் விஜய் சேதுபத்தி தனது குரல் மூலம் விளக்கி வருகிறார்.

அண்ணன்கள் இரண்டு பேர், தம்பி ஒருவன் என 3 பேரும் கொலை செய்வதற்க்கு போடும் திட்டமே காதுகளை தீட்ட வைக்கிறது. பின்னர் மூவரும் கேரளாவுக்கு காட்டு பகுதியில் நடந்து சென்று குறிப்பிட்ட வீட்டை அடைவதும் யாரை கொல்ல வந்தார்களோ அவருக்கும் அவரது மகனுக்கும் நடக்கும் மோதலை பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவதும் ஒருவழியாக அந்த நபர் கடத்தி வந்து கொன்றுவிட்டு தபித்து செல்லும் நிலையில் எதிர்பாராத திருப்பங்கள் கதையை சுவராஸ்யமாக்குகிறது. திடீரென்று முழுக்க ஆக்‌ஷன், கிரைம் படமாக மாறிவிடுகிறது.

திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியில் 2 அண்ணன்கள் இறந்துவிடுவதும் அதன்பிறகு ரவுடியிடம் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்று தம்பி கதாபாத்திரம் மட்டும் காட்டுக்கள் ஓடி ஒளிவதும். போலீசிடம் சிக்குவதுமாக கண்ணாம்பூச்சி விளையாட்டு நடக்கிறது.

லாரி டிரைவராக வருபவரும் அவரது மகனும் புதிய கேரக்டர்களாக இணைந்தாலும் காட்சிக்கு திருப்புமுனையாக இருக்கின்றனர். ஒரே காட்சியில் விஜய் சேதுபதி தலைகாட்டிவிட்டு செல்கிறார்.

இயக்குனர் நிஷாந்த் கலிதிண்டி விளம்பர படங்கள், குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் இப்படத்தை இயக்கி உள்ளார் ஆனாலும் ஒரு கிரைம் கதைக்கு என்ன்வெல்லாம வேண்டுமோ அதையெல்லாம் பொருத்தமாக அமைத்து படமாக்கி இருப்பதன் மூலம் தன்னை ஒரு இயக்குனராக கண்முன் நிறுத்துகிறார்.

கதைடை சொன்னபடி  படமாக்க கேமிராமேன்கள் அஜீம் மொஹம்மத்,  ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப். அரும்பாடு பட்டிருக்கின்றனர்.. கேரள பகுதியில் நடக்கும் கதை என்பதால் நிறைய வசனங்கள் மலையாளத்தில் இடம் பெற்றுள்ளது.  புரிந்து கொள்ளும்படியே எளிமையான வசனங்கள் என்பதால்  குழப்பம் எதுவுமில்லை.

வினோத் தணிகாசலம்.  பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

கடைசீல பிரியாணி – கிரைம் வாசத்துடன் மணக்கிறது.

 

 

 

 

 

Related posts

Actor Samuthirakani sells ‘Kuchi Ice’

Jai Chandran

மோகன்லால் – ஷனாயா கபூர் மும்பையில் 2ம் கட்டபடப்பிடிப்பு

Jai Chandran

Actor Jai makes his comeback in racing after 3 years

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend