படம்: மன்மதலீல
நடிப்பு: அசோக்செல்வன், சந்திரமவுலி, சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதிவெங்கட், பிரேம்ஜி அமரன், கருணாகரன், ஜெயபிரகாஷ்
தயாரிப்பு: டி.முருகானந்தம்
இசை:பிரேம்ஜி
ஒளிப்பதிவு: தமிழழகன்
இயக்கம்: வெங்கட் பிரபு
பி.ஆர் ஒ: சதீஷ் (AIM)
பேஷன் டிசைனர் அசோக் செல்வன் மனைவி குழந்தையுடன் வசித்தாலும் இளவயசு பெண்களை உஷார் செய்வதில் கில்லாடி. ஆன்லைனில் பூஜா ஹெக்டேவை உஷார் செய்கிறார் அதேபோல் மழைக்காக தன் வீட்டில் ஒதுங்கும் ரியாவையும் கரெக்ட் செய்கி றார். பூஜா ஹெக்டே வீட்டில் கசமுசா செய்துக் கொண்டி ருக்கும்போது அவரது கணவரிடம் சிக்கிக்கொள்கிறார் அசோக். ரியாவிடம் உல்லாசமாக இருக்கும்போது ரியாவே வீடியோ எடுத்துவைத்துக் கொண்டு அசோக்கை பிளாக்மெயில் செய்கிறார். இறுதியில் எதிர்பாரத முடிவை எடுக்கிறார் அசோக் செல்வன்.
டைட்டிலுக்கு ஏற்ப மன்மதலீலை மட்டுமல்ல காமலீலையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
அசோக்செல்வன் சரியான மச்சக்காரர் ஒன்றுக்கு இரண்டு நடிகைகளின் உதட்டை லிப் டு லிப் என்ற பெயரில் கடித்து சுவைத்திருக்கிறார். பூஜா, ரியாவும் சரியான ஒத்துழைப்பு தந்து அவர்களும அசோக்கின் உதட்டை ஒரு வழி செய்கின்றனர்.
பூஜா வீட்டில் அவரது கணவர் ஜெயபிரகாஷிடம் சிக்கிக்கொள்ளும் அசோக் அங்கிருந்து தப்பிச் செல்ல படும்பாடு காமெடி சமாச்சரமாகிறது. திடீரென்று அந்த சீனே க்ரைமாகவும் மாறி திருப்பத்தை தருகிறது.
படத்தின் முதல் பாதி கிளுகிளுப் பென்றால் இரண்டாம்பாதி சைக்கோ தனமாகி ஷாக் தருகிறது.
பண்ணை வீட்டில் துப்பாக்கியால் அசோக் செல்வன் சுட்டுவீழ்த்தி செய்யம் கொலைகள், வீட்டில் செய்யும் கொலை என பெரிய கிரைம்கள் பற்றி போலீஸ் கண்ணுக்கே தெரியாமல் மறைப்பதெல் லாம் சினிமாத்தனம்.
ஸ்மிருதிக்கு வேலை எதுவும் இல்லை. பிரேம்ஜி, கருணாகரன் போன்றவர்கள் பெயரளவுக்கு வந்து செல்கின்றனர்.
வெங்கட்பிரபு இயக்கிீருந்தாலும் மாநாடு வெற்றிக்கு பிறகு இப்படியொரு படம் ஏன் என கேட்கவைக்கிறார்.
மதியழகன் கேமரா இளவட்டங்களுக்கு சூடு ஏற்றும்.
பிரேம்ஜி இசை ஒகே.
மன்மதலீலை- அடல்ட் மேட்டர்.