படம்: யெல்லோ
நடிப்பு: வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி, சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி, பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ், லோகி, அஜய்
தயாரிப்பு:பிரசாந்த் ரங்கசாமி
இசை: ஆனந்த் காஷிநாத்
ஒளிப்பதிவு: அபி ஆத்விக்
இயக்கம்: ஹரி மகாதேவன்
பி ஆர் ஓ:
பரணி அழகிரி
ஆதிரை (பூர்ணிமா ரவி) காதல் தோல்வியில் மனம் நொந்து வீட்டில் சொல்லாமல் வெளியூர் செல்கிறாள். தன் இளவயது தோழி, தோழனை தேடி அவள் பயணிக்கிறாள். இந்த பயணத்தில் பல்வேறு மனிதர்களை சந்திக்கிறாள். . அதில் இளைஞன் சாயும் ஒருவன் (வைபவ்). இவனும் காதலில் தோற்றவன். ஆதிரை, சாய் இருவரும் நண்பர்கள் ஆகின்றனர். ஆதிரை யாரை தேடி செல்கிறாரோ அவர்களை கண்டுபிடிக்க சாய் உடன் செல்கிறான். இந்த பயணத்தில் ஆதிரை தனது தோழியை சந்தித்தாளா? சாயுடன் ஏற்பட்ட நட்பு என்னவானது? என்பது தான் கிளைமாக்ஸ்.
ட்ராவல் கதை என்பார்கள் அல்லவா அதுபோன்ற ஒரு கதை தான் யெல்லோ. படத்தில் காதல் தோல்வி அடைந்தவள் தோழியை தேடிச் செல்வதுதான் கதையின் ஒன் லைன் என்றாலும் . காட்சிகள் மணிக் கணக்கில் நீண்டு கொண்டே செல்கிறது.
கேரளாவில் உள்ளவர்கள் கூட இந்த இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்திருப்பார்களா என்று தெரியாது அந்த அளவுக்கு கேரளாவில் இன்ச் பை இன்ச் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் படமாக்கி தள்ளி இருக்கிறார்கள்..
யெல்லோ என்று டைட்டில் வைத்ததற்கு பதில் கிரீன் என்று கூட டைட்டில் வைத்திருக்கலாம் அந்த அளவுக்கு கேமராமேன் அபி ஆத்விக், காடு, பசுமை செழித்த மலைமுகடுகள், அருவி, ஆறு, ஆற்றங்கரை, படகுப் பயணம் என்று ஒன்று விடாமல் கண்ணுக்கு விருந்தாக்கி இருக்கிறார்.
பூர்ணிமா ரவி, வைபவ் இருவரின் கதாபாத்திரமும் மெய்யழகன் படத்தில் வரும் கார்த்தி , அரவிந்த்சாமி இருவரையும் ஞாபகப்படுத்துகிறது.மெயழகன் படத்தில் கார்த்திக் பெயர் என்ன என்று அரவிந்தசாமி கண்டுபிடிப்பது தான் கதை, யெல்லோ படத்தில் சோட்டு யார் என்று கண்டுபிடிப்பது தான் கதை.
மேலும் டெல்லி கணேஷ், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி, பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ், லோகி, அஜய் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
பிரசாந்த் ரங்கசாமி படத்தை தயாரித்திருக்கிறார்
இந்த கதையை ஒரு பயண கதையாக இயக்குனர் ஹரி மகாதேவன் தந்திருந்தாலும் பிரேக் அப் ஆனவர்களுக்கு ஆறுதல் தேட ஒரு வழியை காட்டி இருக்கிறார்.
யெல்லோ – கேரளாவை சுற்றிப் பார்க்கலாம்.

Review By
K Jayachandhiran
Trendingcinemasnow.com
