Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மிடில் கிளாஸ் (பட விமர்சனம்)

படம் :மிடில் கிளாஸ்

நடிப்பு: முனிஷ் காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, மாளவிகா

தயாரிப்பு: தேவ், கே. வி.துரை

இசை: பிரணவ் முனிராஜ்

ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன்

இயக்கம்: கிஷோர் முத்துராஜ்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா (D’ One), அப்துல் நாசர்

கதை: முனிஷ்காந்த், விஜயலட்சுமி மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன்,  மகள் இருக்கிறார்கள். விஜயலட்சுமிக்கு ஆடம்பரமாக நகரத்தில் வாழ வேண்டுமென்று ஆசை.  அதற்காக    யூ ட்யூபில் வீடியோ போட்டு பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். முனிஸ்காந்த்துக்கு கிராமத்தில் சென்று வயல்வெளி வாங்கிக்கொண்டு அங்கு வாழ வேண்டும் என்று ஆசை. ஆடம்பர ஆசையில் விஜயலட்சுமி கடன்காரி ஆகிறார். இந்த நிலையில் தான் முனிஷ்காந்துக்கு எதிர்பாராத ஒரு தொகை வருகிறது. ஆனால் அந்தத் தொகையை அவர் தொலைத்து விடுகிறார். இதனால் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்கிறது. தொலைந்த தொகையை முனீஸ் காந்த் கண்டுபிடிக்க போராடுகிறார். இதன் முடிவு என்ன என்பதுதான் கதை.

காமெடி,  குணசித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த முனீஸ்காந்த் முதன் முறையாக இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். கதையின் நாயகனாக நடிக்க இவர் பொருத்தமாக இருப்பாரா என்ற ஒரு சந்தேகம் படம் பார்ப்பதற்கு முன்பு வரை இருந்த நிலையில் படம் பார்த்த பிறகு இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் பொருத்தமான நபர் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு தனது நடிப்பை உயிர்ப்புடன் வழங்கி நெஞ்சை நெகிழ வைக்கிறார்.

முனீஸ் காந்த் மனைவியாக விஜயலட்சுமி.. யார் என்று தெரிகிறதா? சென்னை 28 படத்தில் நடித்தாரே அந்த விஜயலட்சுமி. இவர் இயக்குனர் அகத்தியன் மகள்.
மிடில் கிளாஸ் குடும்பத்து பெண்ணாக விஜயலட்சுமி தனது எதார்த்தமான நடிப்பு மூலம் ஒரு புதிய கோணத்தில் தன்னை கண் முன் நிறுத்துகிறார். 15,000 மட்டுமே சம்பாதிக்கும் கணவன் முனீஸ் காந்தை மதிக்காமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் அவரை திட்டுவது கலகலப்பு ஏற்படுத்தினாலும் இப்படி கூடவா ஒரு மனைவி இருப்பார் என்று யாராவது எண்ணினால் இதைவிட மோசமாக கூட இருக்கிறார்கள் என்பதை யூடியூபில் கணவன் மனைவி நடத்தும் அக்கப்போரை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு முனீஸ் காந்த் அடிக்கடி வீட்டை விட்டுச் சென்று நண்பன் அறையில் தங்குவதும், ஒருகட்டத்தில் நிரந்தரமாகவே சண்டை போட்டு முனிஷ்காந்த்தை விஜயலட்சுமி வீட்டை விட்டு துரத்தும்போது “பாவம், இந்த முனிஷ்காந்த் இந்த பாடுப்படுகிறார்” என்று செண்டிமெண்ட்டு டன் மனதை திருடுகிறார்.

தனக்கு கிடைக்கப் போகும் பெரும் தொகையை பற்றி விஜயலட்சுமியிடம் சொல்ல அதை நம்பி விஜயலட்சுமி ஆடம்பரமாக கடன் வாங்கி செலவு செய்வது இது வில்லங்கத்தில்தான் முடிய போகிறது என்று எண்ணுவது போலவே காட்சிகளும் நகர்கிறது. ஒரு கட்டத்தில் இவ்வளவு பாடுபடும் முனீஸ் காந்த் இழந்த தொகையை மீண்டும் பெற்றுவிட மாட்டாரா என்ற ஆதங்கம் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தொற்றிக் கொள்கிறது.

தேவ், கே வி துரை ஒரு நல்ல படத்தை கச்சிதமாக தயாரித்து தந்திருக்கிறார்கள்.

பிரணவ் முனிராஜ் இசை, சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு கை கொடுக்கிறது.

அறிமுக இயக்குனர் கிஷோர் முத்துராஜ் முதல் படத்திலேயே  முத்திரையை பதித்திருக்கிறார். குடும்ப கஷ்ட நஷ்டங்களை மிகை இல்லாமல் சொல்லி மனதில் இடம் பிடிக்கிறார். தினமும் பார்க்கும் காக்காவை வைத்து கிளைமாக்சில் அவர் சொல்லி இருக்கும் மெசேஜ் அரங்கை கைதட்ட வைக்கிறது.

மிடில் கிளாஸ் – பார்த்தால் பிடிக்கும்.

Review By

K Jayachandhiran

Trendingcinemasnow.com

Related posts

இருமொழிகளில் தயாராகும் ராஜலிங்கா..

Jai Chandran

நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்”

Jai Chandran

எழில் இனியன் தயாரிப்பில் ” காத்து வாக்குல ஒரு காதல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend