Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தீயவர் குலை நடுங்க (பட விமர்சனம்)

படம்: தீயவர் குலை நடுங்க

நடிப்பு: அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம்,
பிரவீன் ராஜா ,
லோகு Nkps, ,ராம்குமார்
தங்கதுரை, பேபி அனிகா,
பிராங்க்ஸ்டர் ராகுல்
பிரியதர்ஷினி, சையத்
ஜிகே. ரெட்டி
பி எல். தேனப்பன், ஓ ஏ கே. சுந்தர்,
வேலா ராமமூர்த்தி, பத்மன்

தயாரிப்பு: ஜி. அருள்குமார்

இசை: பரத் ஆசிவகன்

ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு

கதை & இயக்கம்: தினேஷ் இலெட்சுமணன்

பிஆர்ஓ: யுவராஜ்

எழுத்தாளர் ஒருவர் மர்மமான முறையில் இறக்கிறார் . அதை துப்பறியும் பொறுப்பை இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்) ஏற்கிறார். தீவிர விசாரணையில் எதிர்பார்க்காத  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அதை நூல் பிடித்து செல்லும்போது ஒரு சிறுமியின் பரிதாப கொலையும் உடன் சேர்கிறது. ஒரு பக்கம் மகுடபதி விசாரணை தொடர இன்னொரு பக்கம் கொலைகளும் தொடர்கிறது. இது எங்குபோய் முடிகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

அர்ஜுன் காக்கி வேட்டைக்காரராக வருகிறார். அதிகமாக யூனிஃபார்ம்  அணியாவிட்டாலும்  அதே கறார், கண்டிப்பு காட்டி தனது வேடத்தை தக்க வைக்கிறார்.
தொடக்க காட்சி விசாரணையில் கழுகு பில்டிங், விளம்பர பலகை என்று எதையெதையோ தொடர்புபடுத்தி பேசி ஒரு வழியாக அவர் சிறுமி கொலை சம்பத்துக்கு வந்து சேரும்போது  கிட்டத்தட்ட படம் நிறைவடையும் நிலைக்கு வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பாதி வரை பாய் பிரண்டுடன் சுற்றினாலும் இடைவேளைக்குப் பிறகு ஆக்சன் ஹீரோயின் ஆக மாறிவிடுகிறார். பாய்ந்து பறந்து சண்டை போட்டு அசத்துகிறார். ஹீரோ அர்ஜுனுக்கு ஆக்சன் காட்சி இருக்கிறதா? என்று கேட்டால் கிளைமாக்சில் அவருக்கான  ஒரு அதிரடி ஆக்சன் தந்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் சிவாஜி ராம்குமார் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரபுவை அவ்வப்போது படங்களில் பார்த்தாலும் ராம்குமாரை படங்களில் பார்ப்பது அபூர்வம். இந்த படத்தில் தொழில் அதிபராக ராம்குமார் வருகிறார். அவரது குரலிலும் தோற்றத்திலும் கம்பீரம் குறையவில்லை.

ஹீரோவாக வரும் பிரவீன் ராஜா திடீரென்று வில்லனாக மாறுவது எதிர்பார்க்காத ஷாக்.

தங்கதுரை, பேபி அனிகா,
பிராங்க்ஸ்டர் ராகுல்
பிரியதர்ஷினி, சையத்
ஜிகே. ரெட்டி
பி எல். தேனப்பன், ஓ ஏ கே. சுந்தர்,
வேலா ராமமூர்த்தி, பத்மன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.

பரத் ஆசிவகன் இசை  அமைக்க சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்புக்கான மற்றொரு கதையாக தினேஷ் இலெட்சுமணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சட்டம் தண்டிக்க தவறும்போது தர்மம் கயவர்களை தீர்த்துக்கட்டும் என்ற தீர்வை சொல்லி இருக்கிறார். இந்த தீர்வில் இன்னும் கூட கொடூர தண்டனையை தவறு செய்தவர்களுக்கு அளித்திருந்தால் தவறு என்று சொல்ல முடியாது.

தீயவர் குலை நடுங்க – கொடூர குற்றவாளிகளுக்கு தக்க பாடம்.

 

Related posts

AVATAR 2 IN INDIA WITH 362 CRORES IN 2nd WEEK

Jai Chandran

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர், முதல்வர் தலைவர்கள் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend