தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்ட அறையில் வைத்து பாதுகாக்கப்படுகிரது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
வாக்கு என்ணும் மே 2ம் தேதி ஞாயிற்றுகிழமையாக அமைந்துள்ளது அன்றைய தினம் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் வாக்கு என்ணிக்கை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட் டுள்ளது. ஞாயிறன்று ஊரடங்காக இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை நடக்கும். வாக்கு எண்ணும் அதிகாரிகள், கட்சி பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகை, மீடியாக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அவர்கள் வாக்கு என்ணும் மையங்களுக்கு வருவதில் எந்த தடையும் இருக்காது. எனவே வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டப்படி நடக்கும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.