Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

வர்மாவின் கிளாமர் படம் “நேக்டு நங்கா நக்னம்” நாளை ரிலீஸ்

வர்மாவின் கிளாமர் படம் “நேக்டு நங்கா நக்னம்” நாளை ரிலீஸ்

கொரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார்.

எளிதில் துவண்டுவிடாத மனம் கொண்ட ராம்கோபால் வர்மா, இந்த கரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஏடிடி தளம், வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாணடமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது.

க்ளைமாக்ஸ் படத்தின் பெரும்வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான நேக்டு நங்கா நக்னம் படத்தை இதே தளத்தில வரும் ஜூன் 27 அன்று வெளியிடவுள்ளார்.

நேக்டு நங்கா நக்னம், ஏடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது ராம்கோபால் வர்மா திரைப்படமாகும்

இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக்கிடைக்கும். இந்த தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் முதல் படமும் இதுவே.

சினிமா ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய பாராட்டுகளை கிளைமாக்ஸ் திரைப்படம் பெற்றுள்ளது. சினிமா உலகில் ஆன்லைன் தியேட்டர் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஷ்ரேயாஸ் ஈடியின் புதிய வெர்ஷன் ஏராளமான வெற்றிப்படங்களை வரும் 2021 மார்ச் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.

ராம்கோபால் வர்மா படங்கள் தவிர்த்து, 302, சிவன் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களின் நேரடி வெளியீட்டை மற்ற 10 மல்டிப்ளெக்ஸ்களும் காணவுள்ளன. நயன்தாரா நடிக்கும் தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பும் நேரடியாக ஷ்ரேயாஸ் இடியின் மூலம் வெளியாகவுள்ளது. இது ஷ்ரேயாஸ் ஈடிக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே இருக்கப்போகும் நீண்ட பந்தத்தின் ஆரம்பமாக இருக்கும்.

Related posts

Bachelor movie Adiye Lyrical video hits 1M+ Views.

Jai Chandran

GV Prakash Kumar’s Adangathey

Jai Chandran

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் படமாக்கி நடித்த ஆறு ராஜாவுக்கு நக்கீரன் கோபால், கே.ராஜன், நடிகைகள் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend