கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீடித்தது. இதில் மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். 2021 ஜனவரி மாதம் முதல் ஓரளவுக்கு ஊரடங்கு பெரும்பகுதி தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் தற்போது கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதாக அரசு,ம் சுகாரதார துறையும் அறிவித்துள்ளதுடன். கொரோனா தடுப்பு ஊசிகளும் மக்களுக்கு செலுத்தப்படுகிறது.
நாளுக்கு நாள் கொரோனா தீவிரமாக பரவுவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்து வதுபற்றி அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார். இதையடுத்து இர்வு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கடுப்படுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுப்பாடு விதிமுறைகள் நாளை 20ம் தேதி முதல் அமலாகிறது. அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
* இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி கிடையாது..
*வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை இரவில் தடை விதிக்கப்படுகிறது.
*அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி
* நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கப்பட உள்ளது..
* இரவு 10 மணி முதல் 4 மணி வரை பேருந்துகளை இயக்க அனுமதியில்லாததால், கோயம்பேட்டில் இருந்து நாளை முதல் பகல் நேரங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்,
* ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும்