Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“பராசக்தி” பெயர் வைக்க படத் தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு பராசக்தி என்று தலைப்பு வைத்ததற்கு சிவாஜி ரசிகர் மன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அறிமுகமான, 1952 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா திரு.பெருமாள் முதலியார் அவர்கள்தான் தயாரித்தார். ஏ.வி.எம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.

அந்தத் திரைப்படத்தில் சிவாஜி அவர்களைக் கதாநாயகனாக நடிக்க வைப்பதை ஏவிஎம் நிறுவனத்தின் ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தபோதும் , பெருமாள் முதலியார் அவர்கள் பிடிவாதமாக சிவாஜி அவர்களையே கதாநாயகனாக நடிக்கவைத்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை, நடிகர்திலகம் சிவாஜி அவர்கள், தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற வகையில், ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் வேலூர் வந்து பெருமாள் முதலியார் அவர்களிடம் ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய, எங்களின் தாத்தாவுடைய பெருமைமிகு தயாரிப்புதான் “பராசக்தி”.

பொன்விழா, வைரவிழா கண்டிருக்கும் இந்தத் திரைப்படம் நூறாண்டு ஆனாலும் அதன் தாக்கம் குறையாது என்ற அளவிற்கு, அந்தத் திரைப்படத்தின் கலைஞர் அவர்களின் கனல் தெறிக்கும் வசனங்களும், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும், மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

விரைவில் வெள்ளிவிழா (75வது ஆண்டு) காண இருக்கும் வேளையில், பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் (நேஷனல் பிக்சர்ஸ்) திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்கவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.

இந்தத் தருணத்தில், எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் பெயரைப் வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
———————
நேஷனல் பிக்சர்ஸ்-க்காக
R.கார்த்திகேயன்
தொடர்பு எண்: 9843183158

 

 

*பராசக்தி திரைப்படத் தலைப்பு எதிர்ப்பு போஸ்டர்*
———————–
*நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் “பராசக்தி” திரைப்படத்தின் பெயரை, மீண்டும் புதிய திரைப்படத்திற்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்கள் சார்பில், சென்னை poostar நகரில் ஒட்டப்பட்டுள்ள எதிர்ப்பு போஸ்டர்கள்

 

 

Related posts

Delight Surfschool to make Deliveries in many areas around the city.

Jai Chandran

ஏப்ரல் 5ம் தேதி அகல் விளக்கு ஏற்ற வேண்டும்..

Jai Chandran

அக்னிபாதை திட்டத்தை கைவிடுக: கமல் கட்சிவலியுறுத்தல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend