Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அப்பா குட்டி (பட விமர்சனம் )

படம் : அப்பா குட்டி

நடிப்பு: விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா, ஜென்சன் திவாகர், முருகானந்தம், அருவி மதன், பகவதி பெருமாள்,
வேட்டை முத்துக்குமார்,
விஜயன், ஹரிப்ரியா இசை,
ஹரிதா, ஹரிப்ரியா, முன்னார் ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி, ஸ்ரீஜா ரவி, பிரவீனா, சித்ரா லட்சுமணன்,
குமார் நடராஜன், சுவாமிநாதன்

தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி

இசை : விஜய் ஆண்டனி

ஒளிப்பதிவு : ராஜீவ் ராஜேந்திரன்

இயக்கம்: மு. மாறன்

பிஆர்ஓ : ரேகா

கதை: தன் மகள் தியா (லிதான்யா ) மீது உயிரையே வைத்திருக்கிறார் சூர்யா ( விஜய் ஆண்டனி). அவரை ரவுடிகள் கொல்ல வரும்போது கைக் குழந்தையுடன் ஊரை விட்டு ஊட்டி செல்கிறார். அங்குள்ள பள்ளியில் மகளை படிக்க வைக்கும் நிலையில் மகளுக்கு  உயிரை பறிக்கும் நோய் தாக்குகிறது. அதிலிருந்து குழந்தையை காப்பாற்ற சூர்யா எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார். உண்மையில் அந்த குழந்தை யாருடையது என்ற கேள்விக்கெல்லாம் படபடப்புடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

தொடக்க காட்சியிலேயே ஆக்ஷன் அதிரடியாக படத்தை தொடங்குகிறார் விஜய் ஆண்டனி. பட்டாகத்தியுடன் தாக்க வரும் ரௌடிகளை பஸ் நிலையத்தில் போட்டு பொளப்தும், ஊரை விட்டு ஊட்டி சென்ற பிறகு தன் குழந்தையை வளர்ப்பதற்காக தேடி வரும் காதலை கூட ஏற்காமல் விஜய் ஆண்டனி காதல் விரதம் இருப்பதிலும் ஒரு சஸ்பென்ஸ் ஒளிந்திருக்கிறது என்பதை கிளைமாக்ஸ் நெருக்கத்தில் இயக்குனர் ஓபன் செய்வது திடீர் திருப்பம்.

ஊட்டி கான்வென்ட் டீச்சராக ப்ரீத்தி அஸ்ராணி வருகிறார். டீச்சர் வேலையை விட்டுவிட்டு விஜய் ஆண்டனி பின்னால் காதல் மயக்கத்தில் ப்ரீத்தி சுற்றுவது விஜய் ஆண்டனி மீது அவர் வைத்திருக்கும் காதலா அல்லது விஜய் ஆண்டனியின் குழந்தை மீது வைத்திருக்கும் பாசமா என்ற குழப்பம் இறுதிவரை அவரது காதல் வெற்றி பெறுமா தோல்வி அடையுமா என்ற சஸ்பென்சுக்கு உதவியிருக்கிறது.

விஜய் ஆண்டனி ஹீரோவாக மட்டுமல்லாமல் இசை அமைப்பாளர், எடிட்டர் ஆகிய பொறுப்புகளையும் ஏற்று நிறைவு செய்திருக்கிறார்.
அப்பா மகள் பாசமாக கதை போய்க்கொண்டிருக்கிறதே என்று எண்ணும் நிலையில் திடீரென்று கோர்ட் காட்சிகளாக திரைக்கதை உருமாறுவது சோர்வாக இருந்த ரசிகர்களை நிமிர வைக்கிறது.

முதல் பாதியில் இல்லாத விறுவிறுப்பு கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பரபரப்புடன் காட்சிகள் நகர்கிறது.

பேபி லிதன்யா சென்டிமென்ட்க்கு பயன்பட்டிருப்பதுடன் ஆச்சரியப்படும் நடிப்பையும் வெளியிட்டு அசத்தியிருக்கிறார்.

மேலும் ஜென்சன் திவாகர், முருகானந்தம், அருவி மதன், பகவதி பெருமாள்,
வேட்டை முத்துக்குமார்,
விஜயன், ஹரிப்ரியா இசை,
ஹரிதா, ஹரிப்ரியா, முன்னார் ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி, ஸ்ரீஜா ரவி, பிரவீனா, சித்ரா லட்சுமணன்,
குமார் நடராஜன், சுவாமிநாதன் என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது.

பாத்திமா விஜய் ஆண்டனி படத்தை தயாரித்திருக்கிறார்
விஜய் ஆண்டனி இசையும் எடிட்டிங்கும் வேகத்தை கூட்டியிருக்கிறது
ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு ரசிகர்களை ஊட்டி சாலைகளில் கைபிடித்து அழைத்துச் செல்கிறது.

இயக்குனர் மு. மாறன் தந்தை மகள் பாசத்தை எவ்வளவு உயிர்ப்புடன் தர முடியுமோ அவ்வளவு உயிர்ப்புடன் தந்திருக்கிறார். கிளைமாக்ஸ் நெருக்கத்தில் வரும் திருப்பங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்று அதிர்ச்சியாக நகர்வது என்ன நடக்குமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

அப்பா குட்டி – மகள் மீது பாசமழை பொழியும் தந்தைகளுக்கு சமர்ப்பணம்.

Review by K Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் அல்லு அர்ஜுன்

Jai Chandran

டெக்ஸ்டர் ( பட விமர்சனம்)

Jai Chandran

நடிகர்  கிச்சா சுதீப் ஜோடியான , பாலிவுட் நாயகி ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend