Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மண்டப சொத்து வரி வழக்கு ரஜினி கருத்து.. அனுபவமே பாடம்…

 

ரஜினிகாந்த்தின் ராகவேந் திரா திருமண மண்டபம் கோடம்பாக்கத்தில் உள்ளது.இம் மண்டபத்துக்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப் பியது. ஆனால் மாநகராட்சி அனுப் பிய சொத்து வரிக்கான நோட்டீசை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியதாவது:
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொது முடக்கம் காரணமாக மண்ட பம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந் ததால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். கொரோனா கால வரி குறைப் புக்கு ராகவேந் திரா மண்டபத் திற்கு தகுதி உள்ளது.
இவ்வாறு மனுவில் ரஜினி காந்த் கூறியிருந்தார்
சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி உத்தரவிடும்போது,’மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அத்துடன், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப் போவதாகவும் எச்சரித்ததுடன் வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உத்தரவிட் டார்.
இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

உயர்நீதி மனறம் தனது மனுவை தள்ளுபட்டி செய்ததையடுத்து ரஜினிகாந்த் ஒரு டிவிட்டர் மெசேஜ் வெளியிட்டார். அதில்,’ ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில் மாநகராட்சி யில் மேல்முறையீடு செய்து இருக்க வேண்டும். தவறை தவிர்த்து இருக்கலாம். அனுபவமே பாடம் ’ என டுவிட்டரில் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
மேலும் சென்னை மாநகராட்சி யில் சொத்து வரி 6.5 லட்சத்தை ரஜினிகாந்த் காட்டினார் அதற்கான ரசீது நெட்டில் வலம் வருகிறது

 

Related posts

மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் ‘உன் காதல் இருந்தால்’

CCCinema

VigneshShivN met Minister Anuragthakur

Jai Chandran

Shyam Manoharan directorial Vetri starrer “Production No:1”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend