கொரோனா வைரஸ் தொற்று பரவலால் இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர் கள் மூடப்பட்டன. 4 மாதம் ஆகியும் திறந்த பாடில்லை. லாக்டவுனில் அவ்வப் போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தியேட்டர்கள் திறப்புக்கு அனுமதி அளிக் கப்பட வில்லை. இதனால் தியேட்டர் களில் ரிலீஸ் ஆகவிருந்த பல படங்கள் ஒடிடி தளங்களில் வெளியானது.
தியேட்டரில் வேலை பார்த்த ஊழியர்கள் வேலையில்லாமல் வருமானம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கலாம் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உள்துறை அமைச்சருக்கு பரிந்துரை அனுப்பட்டு உள்ளது. 25 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர் களை திறக்க சிபாரிசு செய்யப்பட்டிருக் கிறது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் பரிந்துரை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.