Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதிய படத்தில் விமல் ஜோடியாக தான்யா ஹோப்

பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும்  நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் MIK Productions No 1 இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

எம் ஐ கே புர்டக்‌ஷன் பி லிமிடெட் (MIK production (P) Ltd) நிறுவனம் சார்பாக பி இளையராஜா தயாரிக்கும் இந்தப்புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தடம், தாராளபிரபு படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

பல வெற்றி படங்களில் தனது சிறந்த ஒளிப்பதிவை வழங்கிய வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.  அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு பெயர்பெற்ற கனல் கண்ணன் இப்படத்தின் சண்டை பயிற்சி அளிக்கிறார்.  இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் firstlook போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்து.

இப்டத்தின் எடிட்ராக: கோபி கிருஷ்ணா பொறுப்பேற்றிருக்கிறார். ஆர்ட் டைரக்டர் : ஜெயகுமார். எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கர்ண ராஜா. புரொடக்சன் எக்ஸிகியூட்டிவ்: தர்மராஜ் மாணிக்கம். மக்கள் தொடர்பு : பி. தியாகராஜன்.

Related posts

சபையர் ஸ்டுடியோஸ் வெளியிடும் பிரபு தேவா படம்

Jai Chandran

ManasviKottachi Starring Vizhudhu

Jai Chandran

பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’

CCCinema

Leave a Comment

Share via
Send this to a friend