Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

2 நாளில் 5 கோடி பார்வை பெற்ற அமேசான் பிரைம் சுழல் முன்னோட்டம்

அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம் வெளியான இரண்டு நாட்களில், பல்வேறு மொழி களிலும், பல்வேறு இயங்கு தளங்களிலும் 50 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோவின் சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர் இன்றைய சூழலில் பார்வையாளர்களி டையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் புலனாய்வு நாடக படைப்புகளில் ஒன்றாகும். இது நம்முடைய தேசத்திலிருந்து மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாட்டின் பார்வையாளர்களிட மிருந்தும் அன்பை பெற்றிருக்கிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த தொடரின் முன்னோட்டம், அனைத்து மொழிகளிலும், இயங்குதளங்களிலும் உலகளவில் ஐந்து கோடி பார்வையாளர்களால் பார்வை யிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ மிகவும் சுவராசியமான, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வசீகரிக்கும் தொடர்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் என அனைத்தும் தொடரை பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக் கிறது.

புஷ்கர் & காயத்ரியின் பட்டறையிலிருந்து உருவாகியிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர், 30க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் ஜூன் 17ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்படவிருக்கிறது.

Related posts

“டியர்” பட உரிமை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது

Jai Chandran

ஜாக்கி சானின் “வேன்கார்ட் ” டிசம்பர் 25ல் ரிலீஸ்..

Jai Chandran

வில்லாக வளைந்து சல்மானுடன் மோதிய உளவாளி கத்ரீனா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend