Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விக்ரம் பிரபு நடிக்கும் பகையே காத்திரு..

கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் பகையே காத்திரு. விக்ரம் பிரபு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் இதுவரையில் அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த சமூக படமாக உருவாக இருக்கிறது கதாநாயகியாக சம்ருதி வெங்கட் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார் சாய்குமார் இருவரும் தமிழ் திரைப் படங்களில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் மேலும் சதீஷ் வித்யா பிரதீப் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்
செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய ஷாம் சிஎஸ் இசை அமைக்கிறார் பிரம்மாண்ட அரங்குளை கலை இயக்குனர் சிவா யாதவ் அமைக்கிறார். ராஜாமுகமது  எடிட்டிங் செய்ய அதிரடியான சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்க உள்ளார். ஏஜெய் சம்பத் நிர்வாக தயாரிப்பு. ஏற்கிறார்  மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஏ. மணிவேல் இயக்குகிறார். இவர் காக்கி என்னும் குறும்படத்தை இயக்கியவர்.

இப்.படம் கொச்சின் ஹைதராபாத் சென்னை ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது இப்படத்தை கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராசி முத்துசாமி தயாரிக்கிறார்
இப்படத்தின் துவக்க விழா வரும் வெள்ளிக்கிழமை 16 4 2021 ரேகா ஹவுஸில் காலை 10 மணி முதல் நடைபெறும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மே மாதம் இறுதி வரை தொடர்ந்து நடைபெறும்.

Related posts

ஹெய்ஸ்ட் திரில்லர் ஆதாரம் பட அதிரடி டீசர் !!

Jai Chandran

Director K.Bhagyaraj Appreciated the Actor, Director UDHAYAA

Jai Chandran

Much awaited mystery thriller Chehre, in theatres on 30th April, 2021

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend