Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆகஸ்ட் 16 1947 (பட விமர்சனம்)

படம்: ஆகஸ்ட் 16 1947

நடிப்பு: கவுதம் கார்த்திக், ரேவதி, புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ஜான்சன் ஷா

தயாரிப்பு: ஏ.ஆர்
முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட்

இசை: சீன் ரோல்டன்

ஒளிப்பதிவு: செல்வகுமார்

இயக்கம்: என். எஸ். பொன்குமார்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா நாசர் ( D ‘ One)

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மெட் ராஸ் மாகாணத் துக்கு உட்பட்ட காட்டுப் பகுதி கிராமப் புரத்தில் வெள்ளைக்கார அதிகாரி ராபர்ட் துரை அவரது மகன் ஜஸ்டின் துரை அந்த கிராம மக்களை கொடு மைப்படுத்துகின்றனர். ஊரில் ஒரு இளம் பெண் ணையும் விடாமல் வேட்டையாடுகி றான் ஜஸ்டின் . அவனை தட்டிக் கேட்க ஒருவனுக் கும் தைரிய மில்லை. கிராமத் தில் ஜமீன்தாரே தன் மகளை வீட்டுக் குள்ளயே யாருக் கும் தெரியாமல் குறிப்பாக ஜஸ்டின் துரைக்கு தெரியா மல் வளர்த்து வருகிறார். இதுதெரிந்து ஜஸ்டின், ஜமீன் மகளையே கைவைக்க துணி கிறான். இதற்கி டையில் இந்தியா வுக்கு சுதந்திரம் தர ஒப்பந்தம் கையெ ழுத்தாகிறது. அது தெரிந்தால் தன் கட்டுப்பாட்டிலிருக்கும் மக்கள் தன்னை மதிக்க மாட்டார்கள் என்று எண்ணும் ராபர்ட் துரை கிராம மக்களிடம் சுதந் திரம் கிடைத்த விஷயத்தை சொல் லாமல் மறைக்க முயல்கிறார். இதற் கிடையில் ராபட்ரின் மகன் கொல்லப்படுகிறார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ராபர்ட் கிராம மக்களை ஒட்டு மொத்தமாக துப்பாக்கியால் சுட்டு கொல்ல வேகமாக வருகி றார். அடுத்து நடந்தது என்ன என்பதற்கு கிளை மாக்ஸ் பதில் சொல்கிறது.

கொஞ்சம் சிரம மான கதை. இளவட்டங்கள் புரிந்துகொள்ள ஒன்றுக்கு இரண்டு முறை கதையை கேட்க வேண்டும்.
எங்கோ ஒரு மலைக் கிராமத் துக்குள் நடக்கும் கதை என்றாலும் பிரிட்டிஷ்காரர்களிடம் மக்கள் படும் அடிமை வாழ்க்கை யின் கொடுமை, முதுகு தோலை உரிக்கும் சித்ரவ தை திகில் பரச் செய்கிறது.

ராபர்ட், ஜஸ்டினாக நடித்திருக்கும் இரண்டு வெள் ளைக்கார பாத் திரங்கள்தான் படத்தை டென்ஷன் பரவ நகர்த்துகிறது.
கையில் இருக்கும் சாட்டையால் மக்களை அடித்து அவர்களின் தோலையும் சதை யையும் கிழிக்கும் கொடுமை பரபரப்பு.

கவுதம் கார்த்திக் ஜமீன் வீட்டு வேலைக்காரன் பரமன் வேடத்தை ஏற்றிருக்கிறார். சில காட்சிகளில் நடிக்க முயன் றாலும் அவரது ஆங்கில வாடை வீசும் வசனம் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
காதலியின் கழுத்தை நெறிக் கும் வெள்ளைக் கார துரையின் காலை வெட்டுவது எதிர் பார்க்காத அதிர்ச்சி.

ஜமீன் மகளாக வரும் ரேவதி அழகு சிலையாக பதிகி றார். நடிப்பில் சிறு குழந்தையாகவே தெரிகிறார்.
ரேவதி என்ற பெயருக்கு தமிழ் திரையில் எவ்வ ளவு வெயிட் இருக் கிறது என்பதை ரேவதி நடித்த ஒரு சில பழைய படங்க ளையாவது புதுமுக ரேவதி பார்ப்பது அடுத்தடுத்த படங்களில் நடிக்க கைகொடுக்கும்.

சிரித்து சமாளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் இதில் மேக்சிமம் நடிப்பை வழங்கி திணறடிக் கிறார். சுதந்திரம் கிடைத்த தகவலை வெளியில் சொல்லாமலிருக்க அவரது நாக்கை வெள்ளைக்காரத்துரை அறுத்துவிட வழியில் துடிக்கும் புகழ் எப்படியாவது அந்த தகவலை வெளிப்படுத்த வேண்டும் என்று பலவிதமாக முயல்வது உருக்கம்.

துணை கதாபாத்தி ரங்களில் நடித்தி ருக்கும் பாட்டி தாத்தாக்கள் இயற்கையான நடிப்பில் மிளிர்கின் றனர்.

இந்திய சுதந்திரம் பற்றிய கதையை ஒரு குக்கிராமத் துக்குள் சொல்ல முயன்றாலும் சுதந்திர போராட்டத்தின் தாக்கத்தை தோல் வெறும் இரண்டு வெள்ளைக்கார துரைக்கள் மட்டுமே போதுமானதாக இல்லை.

பான் இந்தியா படமாக்க கதைக் கரு போதும் ஆனால் காட்டப் படும் காட்சிகள், நடிகர்கள், ஏன் இசை கூட பான் இந்தியா அளவுக்கு இல்லை. செலவை குறைக்க நினைத்து பிரமாண்டங்களை தவிர்த்திருப்பது மைனஸ்.

சீன் ரோல்டன் பாடல்களுக்கு பொருத்தமாக அமைத்த இசை தாளமிட வைக் கிறது.

வெள்ளைக்கார துரையுடன் கவுதம் கார்த்திக் மோதும் ஸ்டண்ட் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தியிருந் தால் ஹைலைட் டாக பேசப்பட்டி ருக்கும் .

பான் இந்திய படங்களில் தற்போதைக்கு கதை ஒன்லைன் இருந்தாலும் இசை பிரமாண்டம் ஆக்ஷன் மூன்றும் பிரதானமான இருப்பதைதயாரிப்பாளர் ஏ. ஆர்.முருகதாஸ் எப்படி மறந்தார் என்பது தெரிய வில்லை.

இயக்குனர்
பொன்குமார் கடுமையான உழைப்பு படத்தை தாங்கிப்பிடிக்கிறதுவசனங்களில் சுதந்திரத்துக்காக போராடிய காந்தி, சுபாஷ், பகத்சிங், சந்திரபோஸ் என போராளிகளின் பெயர்களை பயன்படுத்தியிருந்தால் இன்னும் காட்சிகள் ஒன்றிப் போயிருக்கும்.

ஆகஸ்ட் 16 1947 – கொடியில்லா கம்பம்

 

 

Related posts

லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் ( பட விமர்சனம்)

Jai Chandran

கொரில்லா போல் மாறிய ஹீரோ தருண் விஜய்யால் பரபரப்பு

Jai Chandran

Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend