Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மனிதன் தெய்வமாகலாம் (பட விமர்சனம்)

படம் : மனிதன் தெய்மாகலாம்

நடிப்பு: செல்வராகவன், மைம் கோபி, ஒய் ஜி மகேந்திரன், கௌசல்யா, குஷி ரவி இவர்களுடன் சதீஷ்

தயாரிப்பு: சதீஷ்

இசை: ஏ கே பிரியன்

ஒளிப்பதிவு : ரவி வர்மா

இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத்

பிஆர்ஓ : ரேகா

கிராமப்புறத்தில் நுங்கு விற்கும் ராகவுக்கு (செல்வராகவன் ) செல்வி (குஷி ரவி) என்ற பெண் பார்த்து திருமணம் செய்கிறார்கள். அழகிலும் வசதியிலும்   ராகவனைவிட செல்வி ஒரு படி உயர்ந்திருந்தாலும் ராகவனின் குணம் கண்டு அவரை திருமணம் செய்கிறார். வாழ்க்கையில் முன்னேறுவதற்காக ஒரு ஓட்டல் தொடங்கி நடத்த ஐடியா தருகிறார் செல்வி. ஓட்டலிலும் நல்ல விற்பனை நடக்கிறது. திடீரென்று செல்வி இறக்கிறார். அதைக் கேட்டு ராகவ் அதிர்ச்சி அடைகிறான் . செல்வி இறந்தது ஏன் என்பதற்கான காரணம் அறிந்த  ராகவ் எடுக்க முடிவு என்ன என்பதற்கு உணர்ச்சி பிழம்பான பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

பெரும்பாலும் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் செல்வராகவன் இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். முழு படத்தையும் அவரால் தாங்கி நிற்க முடியுமா என்ற கேள்வி தொடக்கத்தில் இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கும்விதம் அவரை கதையின் நாயகனாக ஏற்றுக் கொள்ள வைக்கிறது.
மனைவி மீது அன்பு மழை பொழியும் செல்வராகவன் ஒரு கட்டத்தில் தன்னிடம் மனைவி ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டதும் என்ன ஏது என்று கூட கேட்காமல் உடனடியாக அவரிடம் பணத்தை கொண்டு வந்து செல்வராகவன் கொடுப்பதும் அதை கண்டு மனைவி குஷி ரவி நெகிழ்ந்து”எதற்காக கேட்கிறேன் என்று கேளுங்கள்” என செல்வராகவனிடம் கேட்க, அவர் மாட்டேன் என்று தலையசைப்பது இந்த தம்பதிகளுக்குக்குள் இப்படி ஒரு பந்தமா என்று மனதை கனமாக்குகிறது.

நாயகி குஷி ரவி செவச்செவவெனயிருந்தாலும் கிராமத்து கதாபாத்திரத்திற்கு ஏற்ப இயல்பாக நடக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு கௌசல்யா தலைகாட்டியிருக்கிறார். கிளாமரை குறைக்கிறேன் என்ற பெயரில் அவரது முகத்தில் கருப்பு சாயத்தை பூசி இயல்பான அழகை கெடுத்திருப்பது ஏற்க முடியவில்லை.

ஒய் ஜி மகேந்திரன், மைம் கோபி, தயாரிப்பாளர் சதீஷ் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஏ கே பிரியன் இசை காட்சிகளோடு ஒத்துப் போயிருக்கிறது. ரவி வர்மா கேமரா எளிமையை படமாக்கியிருக்கிறது.

ஒரு உண்மைச் சம்பவத்தை வாழ்க்கை நடைமுறை எதார்த்தத்தோடு இயக்கி இருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத்.

மனிதன் தெய்வமாகலாம் – பாசம் காட்டுபவர்களுக்கு..

Review By
K. Jayachandhiran
trendingcinemasnow. com

 

Related posts

NaaneVaruven Shooting Begins from Today!

Jai Chandran

விஜய் ஆண்டனி நடிக்க பாலாஜி கே குமார் இயக்கும் ‘கொலை’.*

Jai Chandran

45 நிமிடத்துக்குள் அனிருத்தின் #Hukum புதுசாதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend