Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படப்பிடிப்பு

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவர கொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ நிர்வானா- நடிகர் விஜய் தேவரகொண்டா – ‘ ஹிரு தயம்’ படம் புகழ் இசைமைப்பாளர் ஹேஷாம் ஆகியோர் அண்மை யில் முக்கியமான சந்திப்பு ஒன்றினை நடத்தி, விரிவாக விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து ‘குஷி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இந்த படப்பிடிப் பில் கலந்து கொள்ள படத்தின் நாயகியான நடிகை சமந்தாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘குஷி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கு கிறது. இதனை ‘குஷி’ படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவன   மான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தி யிருக்கிறது. மேலும் இந்த திரைப் படம் தொடர்பான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்  கப்படுகிறது.

Related posts

மரணத்துடனான உரையாடலாக அமைந்துள்ளது “ விநோதய சித்தம்” : கமல்

Jai Chandran

சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க வரும் செ பிக்சர்ஸ்

Jai Chandran

கார் கேட்ட மகளுக்கு பாடம் கற்று தந்த நடிகர் ரகுமான் !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend