Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர், நடிகர் டி பி.கஜேந்திரனுக்கு அஞ்சலி

இயக்குனர், டி.பி.கஜேந்திரன் காலமானா ர். அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித் துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன்  உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. இவர் முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஆவார். எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவன், திருமலை, சொக்கத்தங்கம், பிதாமகன், பேரழகன் சந்திரமுகி, பம்மல் கே.சம்பந்தம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அவருடைய இழப்பு தமிழ் திரையுலகில் ஒரு மாபெரும் இழப்பாக கருதப்படுகிறது.

அவருடைய மறைவு திரைப்படத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் திரைப்பட உலகினருக்கும், ரசிகர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

திரைப்பட பாடலாசிரியர் ஆவது உங்கள் இலட்சியமா? இயக்குநர் வசந்தபாலனின் வண்ணமிகு போட்டி

Jai Chandran

பாக்ஸ் ஆபிஸில் விஜய்சேதுபதியின் மகாராஜா

Jai Chandran

Team Pushpa wishes FahadhFaasil

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend