சென்னை : அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திமுக கூட்டணியை எதிர்த்து கருத்து தெரிவித்தார்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துக் கொண்டு. நூலை வெளியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நூலை பெற்றுக் கொள்வதாக முன்னதாக தகவல் வெளியானது. இது சர்ச்சையான நிலையில் திருமாவளவன் நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்காமல் தவித்தார். அத்துடன் தன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சியை புரிந்து கொண்டே இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் நடிகர் விஜய் விழாவில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதனை
அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு , ஆதவ் அர்ஜூனா, விகடன் குழுமத் தலைவர் சீனிவாசன் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் நடிகர் விஜய் பேசினார். அவர் பேசியதாவது:
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை நான் மிகப்பெரிய வரமாக கருதுகிறேன். இன்றும் பல பேருக்கு பிடித்தமான இடமாக இருப்பது நியூயார்க். ஆனால், 100 வருடத்திற்கு முன்பே நியூயார்க் சென்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்று சாதித்த ஒரு அசாத்தியமானவராக இருந்தார், அவர் தான் அண்ணல் அம்பேத்கர்.
ஆனால், அவர் எந்த சூழ்நிலையில் படித்தார் என்றால், நீ எல்லாம் படிப்பதற்கே லாயக்கில்ல, நீ எல்லாம் படித்து என்ன செய்யப் போற, நீ ஏன் பள்ளிக்கூடம் வருகிறாய் என்று அவரை விமர்சனம் செய்தவர்கள் மத்தியில் அவர் படித்தார். அதையும் மீறி அவர் படிப்பதற்கு பள்ளிக்கூடம் சென்றால் சக மாணவர்களோடு அவரால் அமரக்கூட முடியாது, அவருக்கு அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காது. இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும், ஒரே ஒரு சக்தி மட்டும் அவருக்கு உந்துதோளாக இருந்தது. அதுதான் அவர் மனதிற்குள் இருந்த வைராக்கியம் அது அவரை உந்திக் கொண்டே இருந்தது. அந்த வைராக்கியம் தான் அந்த மாணவரை பிற்காலத்தில் இந்த நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக மாறுவதற்கும் காரணமாக இருந்தது
மக்களை மதிக்காத, மக்களின் சமூக நீதியான பாதுகாப்பை உறுதி செய்யாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இரு மாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்களுடைய சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும், 2026 மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்.
திருமாவளவனால் இன்று நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆனாலும், அவரது மனசு முழுக்க முழுக்க இன்று நம்முடன் தான் இருக்கிறது.
இவ்வாறு விஜய் பேசினார்.