Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இரண்டு பாகமாக உருவாகும் வெற்றிமாறனின் “விடுதலை”

ஆர்  எஸ்.இன்போடெயின்மென்ட் மற்றும் ரெட்  ஜெயன்ட் மூவிஸ் ( RS Infotainment & Red Giant Movies) எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் வழங்க. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் “விடுதலை” படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது.

படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத் தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர் வமாக அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில் தூக்கிப்பிடித்த, தேசியவிருது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். ஆர்.  எஸ் இன்போடெயின்மென்ட்  ( RS Infotainment ) சார்பில் தயாரிப் பாளர் எல்ரெட் குமார் இப்படத்தி னை பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

சூரி நாயகன் என்பதில் ஆரம்பித்து இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. தற்போது அடுத்த அதிரடியாக இப்படத்தின் இரண்டு பாகங்களையும்  ரெட் ஜெயன்ட் மூவிஸ்  சார்பில் உதயநிதி வழங்குகிறார் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. தொடர் வெற்றிப் படங்களின் பிராண்டாக மாறியி ருக்கும்  ரெட் ஜெயன்ட்  மூவிஸ் நிறுவனம் “விடுதலை” படத்தினை வெளியிடுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

விடுதலை- பாகம் 1 இன் படப் பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் ‌ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை 2 ஆம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.
தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் விடுதலை- பாகம் 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் தமிழில் ஒரு முழுமை யான திரை அனுபவம் தரும் படைப்பாக, பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக மாறி நிற்கும் விடுதலை படம் பார்வையாளர் களிடம் பெரும் அலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் அமைக்கப்பட்ட 10-கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் இப்படத்தின் பிரமாண்டத்தை கூட்டியுள்ளது. ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அச்சு அசலாக தோற்றமளிக்க, பாலம் மற்றும் ரயிலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அதே பொருட் களைக் கொண்டு இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிறுமலையில் ஜாக்கி தலைமையிலான கலைத்துறை ஒரு கிராமத்தினை அச்சு அசலாக உருவாக்கியது குறிப்பிடதக்கது.

தற்போது, கொடைக்கானலில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்கு வதற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்‌ஷன் காட்சி யை அமைக்கிறார். பல்கேரியா வில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்திருக்கும் திறமையான ஸ்டண்ட் டீம் இந்த ஆக்‌ஷன் ப்ளாக்கில் பங்கேற்கிறார்கள்.

விடுதலை படத்தில் பிரமாண்ட. மான நட்சத்திர கூட்டணி அமைந் துள்ளது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கி றார்கள். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளைய ராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

விடுதலை பாகம் 1 & விடுதலை பாகம் 2 ஆகிய இரு படங்களையும்  ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் நிலையில், முதல் பாகத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Related posts

Vembu Cinematographer Kumaran’s World Guinness Movie

Jai Chandran

‘பெடியா’ படத்திலிருந்து ‘”எனக்காய் பிறந்தவளே நீயா” பாடல்

Jai Chandran

Rajini kickstarts Y Gee Mahendra starrer ‘Charukesi’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend