திரைப்பட இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்துசண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயர்கள் படங்களிலும் கலைஇயக்குனராக பணிபுரிந்தவர் இவர்.
கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும் தொடர்ந்து மூன்று முறை தேர்வாகி பணிபுரிந்து வந்தார்.
புற்றுநோயின் பாதிப்பில் இருந்த அவர் இன்று (27.06.2021) காலமானார். அவரது உடல்
எண் : 32/52
குமரப்ப முதலி தெரு
துங்கம்பாக்கம்
சென்னை 600034-ல் உள்ள
அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை (28.06.2021)
அவரது உடல் 12 மணியளவில நல்லடக்கம் செய்யப்படும்
என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்பு எண் :-
வெங்கட் 9382876019
பெப்சி பொதுச்செயலாளர் அங்கமுத்துசண்முகம் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க இரங்கல் தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியதாவது:
அங்கமுத்துசண்முகம் அவர்கள் கலை இயக்குனர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்திற்கும் உழைத்தவர்.
திரு. வி.சி.குகநாதன் அவர்கள் பெப்சியின் தலைவராக இருந்தபொழுது அவரின் வழிகாட்டுதலில் பொருளாளராக அவருடன் சிறப்பாக பணியாற்றி திரைப்பட தொழிலாளர்களின் பாராட்டை பெற்றவர் –
பெப்சியின் தலைவராக திரு.ஆர்.கே.மூன்று முறை தேர்வாகி செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவருடன் இவரும் மூன்று முறையும் பொதுச்செயலாளராக தேர்வாகி அனைவரிடமும் நன்மதிப்பை பெற்று செயலாற்றி வந்தார்.
திரு.கே.ஆர்.
திரு.ஆர்.கே.செல்வமணி
திரு.மனோஜ்குமார் ஆகியோர் டைரக்ட் செய்த படங்களில் தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றினார் என்பதை அந்த மூன்று இயக்குனர்களும் கூறியதுதான் அவருக்கு பெருமை.
அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், திரைப்பட தொழிலாளர்களுக்கும்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது –