Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராமர் கோவில் திறப்பு விழா நாளில் ஹனுமான் போஸ்டர்

‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் – ஒரு சொல்லப்படாத காவியம்!! “ திரைப்படத்தின் போஸ்டர், ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வெளியிடப்பட்டது!!

இப்படத்தின் வசீகரிக்கமிக்க போஸ்டரை, சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம், அயோத்தியின் வரலாற்று நிகழ்வையொட்டி, வெளியிட்டது.

சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்பில், உருவாகும் மகத்தான படைப்பான “ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்” திரைப்படத்தின் புதுமையான போஸ்டரை, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் புனித நாளில், பெருமை யுடன் வெளியிட்டுள்ளது. கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் இந்தத் திரைப்படம், மதிப்புமிக்க ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை கூறுவதோடு, காவியக் கதையின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும்.

ராமர் கோயில் திறப்பு விழாவினை யொட்டி வெளியிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான போஸ்டர், அயோத்தியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை எதிரொ லிக்கும் வகையில், ரசிகர்களிடம் வரவேற்பை குவித்துள்ளது. ‘ராமாயணத்தின் சொல்லப்படாத இதிகாசம்’ என்ற டேக்லைன், ராமாயணம் குறித்து இதுவரை ஆவணப்படுத்தப்படாமல் இருக் கக்கூடிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படமாக, இப்படம் இருக்குமென்பதைக் குறிக்கிறது.

மலைகள், நெருப்பு, நீர் மற்றும் ராமர் மற்றும் அனுமன் தெய்வீக இரட்டையர் போன்ற கூறுகளைக் கொண்ட இந்த போஸ்டர், அயோத்தியில் இந்த மகிழ்ச்சி யான தருணத்தின் சாரத்தை படம்பிடித்து காட்டுவதாக அமைந் துள்ளது. இயக்குநர் அவதூத் இயக்கும் ‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’ படம், அதிரடி மிகுந்த ஆக்சன் காட்சிகளுடன், காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை உயிர்பிக்கும்.

கன்னடத்தில் பாராட்டுகளைக் குவித்த பிரபல தயாரிப்பாளர் கே ஏ A.சுரேஷ், சுரேஷ் ஆர்ட்ஸ் பேனரின் கீழ், இந்த லட்சியத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். பல மொழிகளில் இருந்து மதிப்புமிக்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர், இது ஒரு மாறுபட்ட மற்றும் புகழ்மிகு ஒருங்கிணைப்பாக இருக்கும்.

தற்போது ஸ்டோரிபோர்டிங் மற்றும் VFX ஆரம்ப பணிகள் நடந்து வருகின்றன. “ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்” படத்தின் தயாரிப்பு மற்றும் கதைக்களம் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படும். மொழித் தடைகளைத் தாண்டி எதிரொ லிக்கும் மாறுபட்ட கதைகளை வழங்குவதில், பான் இந்தியா சினிமாவின் அர்ப்பணிப்புக்கு, இந்தப் படம் ஒரு சான்றாக இருக்கும்.

Related posts

லாக்கர் (பட விமர்சனம்)

Jai Chandran

காதலர் தினத்தன்று சக்திஸ்ரீ கோபாலனின் புதிய படைப்பு ‘நீ போதுமே’

Jai Chandran

தேச துரோக வழக்குக்கு இடைக்கால தடை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend