Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மின் கட்டண கோரிக்கை குறித்து தங்கர் பச்சான் விளக்கம்..

இயக்குனர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள  அறிக்கை:

எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்து விட்டதாகவும், நான் அதற்குப்பின் மன்னிப்பு கோரியதாகவும் இரண்டாவது முறையாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கேள்வி ஒன்றுக்கு சட்ட மன்றத்தில் பதில் அளித்துள்ளார். உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்ததுடன் ஒரு மாதத்திற்கு முன் முதலமைச்சருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க மறுக்கின்றார்.

எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்க்கக்கோரி அல்ல. மாதாந்திர மின் கட்டண முறையை செயல் படுத்தாததினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான்.

முதலமைச்சர் இது குறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின் போதும் திமுக தேர்தல் அறிக்கையிலும் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கின்றேன். இது என்னுடைய வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாட்டிலுள்ள அனைவரின் பிரச்சினை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். இப்பொழுதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கையை உணர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வார் என நம்புகின்றேன்.

இவ்வாறு தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

 

Related posts

இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியின்றி தேர்வான நிர்வாகிகள்..

Jai Chandran

First Look Poster of Natty’s #WEB

Jai Chandran

அரசிடம் மாதாந்திர ரிப்போர்ட் கேட்கும் கமல்ஹாசன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend