இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்த பாடில்லை. எல்லா மாநிலங்களும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருப்பதால் ஊரடங்கு நீடிக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லியில் கொரோனா தொற்று குறைந்திருப்ப தாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலை யில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அவருக்கு வயது 55. இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அமித்ஷா வுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுபற்றி டிவிட்டரில் தெரிவித்திருக்கும் அமித்ஷா,’கொரோனா டெஸ்ட் செய்து கொண்டதில் தொற்று பாசிடிவ் என தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் டாக்டரின் அறிவுரை பேரில் சிகிச்சைக்கு சேர்ந்திருக்கிறேன் கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதுபற்றி சோதனை செய்துக் கொள்ளுங்கள்’ என தெரிவித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்புதான் அமித்ஷா மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.