சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் (ராஜ் பவன்) தீ அணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியா ளர்களுக்க கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் முன்னெச்சரிக்கையாக, தமிழக கவர்னர் பன்வார்லால் புரோகித் தனிமைப்படுத்தலில் இருந்தார். சென்ற ஜூலை 29 முதல் ராஜ் பவனில் அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார். பன்வாரிலால் புரோஹித் கொரோனா. அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இருந்தது தெரிந்தது. இன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கொரோனா தொற்றை உறுதி செய்தது. பின்னர் மாலையில் அவர் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
வீட்டிலேயே கவர்னரை தனிமைப்படுத்திக் கொள்ள டாக்டர்கள் கூறி உள்ளனர். மருத்துவ மனை டாக்டர்கள் குழு ஒன்றும் அவரை கண் காணித்து சிகிச்சை அளிக்கும் .சமீபத்தில்தான் தமிழக அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றனர என்பது குறிப்பிடத்தக்கது.
previous post