ரஜினிகாந்த நடித்த சந்திரமுகி படத்தின் 2ம் பாகத்தில் லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகம் இயக்குகி றார். இதில் சந்திரமுகியாக ஜோதிகா, அல்லது சிம்ரன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி படத்தில் நடித்த கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக சில தினக்களுக்கு முன் தகவல் வெளியானது.
இதுபற்றி ராகாவா லாரன்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் ஜோதிகா அவர்கள் சிம்ரன் அவர்கள், மற்றும் கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும். தற்போது திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனா சூழ்நிலை முடிவு பெற்ற பிறகே தயாரிப்பு நிறுவனம் மூலம் அது பற்றி அதிகாரபூர்வமாக வெளியிடப் படும் .
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.