Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நாளை பதவி ஏற்பு

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நாளை பதவி ஏற்புகிறார். இதுகுறித்த விவரம் வருமாறு:

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்.
கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக  வேட்பாளராக போட்டியிட்டார். அதில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதன்மூலம் முதன் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். கட்சியிலும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

சமீபமாக உதயநிதி தமிழகத்தில்  மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகள் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் கட்சி வளர்ச்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம் 27-ந் தேதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அமைச்சர்களும், கட்சியின் முன்னணி தலைவர் களும், மாவட்ட நிர்வாகிகளும் நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அங்கு நடந்த விழாவில் பேசிய அமைச்சர்கள் சிலர் , ‘உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.
பல மாவட்டங்களில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் இந்த கோரிக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

திருவல்லிக்கேணி தொகுதியில் மக்கள் குறைகளை நேரில் கேட்பதுடன் தினமும் சட்டமன்ற அலுவலகத்தில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து மனுக்கள் பெற்றும்  அதை  நிறை வேற்றி வைக்கும் பணியில் தீவிரம் காட்டுவதால் தொகுதியின் செல்லப்பிள்ளை என்று
நல்ல பெயர் எடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் .

அமைச்சராக நியமிக்கப்பட்டால் அந்த பொறுப்பிலும் உதயநிதி தமிழக மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவார் என்று சில அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. வினரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்ற உறுதி யான தகவல்கள் வெளியாகியது.. உதயநிதி ஸ்டாலினை அமைச்ச ராக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந் துரை செய்தார். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். நாளை (புதன் கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடை பெறுகிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் திரைப் படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு அரசியலில் அதிக கவனம் செலுத்துவேன் என்று அவர் ஏற்கனவே  தெரிவித்திருக்கிறார்.

Related posts

72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்.. பாரதிராஜா, நடிகர் விஜய் அஞ்சலி..

Jai Chandran

Actor Vishvath starrer “Rocket Driver”

Jai Chandran

பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பா.ரஞ்சித் இசைக்குழு பாடகி தேர்வு…

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend