படம்:ட்ரிப்
நடிப்பு: யோகிபாபு, கருணாகரன், சுனைனா, மொட்டை ராஜேந்திரன், பிரவின்குமார் (அறிமுகம்), கல்லுரி வினோத், எம்.சித்து, ராகேஷ் (அறிமுகம்), லக்ஷ்மி, நான்சி ஜெனிஃப்ர், ராஜேஷ் (அறிமுகம்). அதுல்யா சந்திரா, மேக் மணி, சதீஷ், ராம்போ,நீத்தி வாசுதேவன், சத்யா, மூனிஷ்
தயாரிப்பு: சாய் ஃபிலிம்ஸ் ஸ்டுடியோஸ் அ.விஸ்வநாதன், இ.ப்ரவின்குமார்
இசை: சித்துகுமார்
ஒளிப்பதிவு: உதயஷங்கர்
இயக்கம்: டென்னிஸ் வி மஞ்சுநாத்
சுனைனா, பிரவின்குமார், கல்லூரி வினோத், லட்சுமி பிரியா, நான்சி என ஒரு நண்பர்கள் குழு கொடைக் கானலுக்கு ஜாலியாக காரில் சுற்றுலா புறப்படுகிறது. போகிற வழியில் பிரவினுக்கு ஒரு போன் அழைப்பு வர அதில் பேசிய குரல் கடவேரி காட்டுக்கு சென்ற இரண்டு பேர் திரும்பிவரவில்லை. அவர்களை தேடி அழைத்து வர முடியாமா என்று கேட்க அவரும் சம்மதித்து கடவேரி செல்ல முடிவு செய்கிறார். சக நண்பர்கள் தாங்களும் உடன் வருவதாக சொல்ல எல்லோ ரும் கடவேரி செல்கின்றனர். அந்த காட்டில் மனிதர்களை கொன்று தின்னும் கொடூர குணம் கொண்ட மனிதர்கள் இருப்பது தெரிகிறது. அவர்களிடமிருந்து தப்ப முயலும்போது ஒவ்வொருவ ராக கொல்லப்படுகின்றனர். கடைசியில் அவர்களிடமி ருந்து யாராவது தப்ப முடிந்த தா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
இயக்குனர் டென்னிஸ் மஞ்சு நாத் தனது முதல் படமாக இப்படியொரு மாறுபட்ட கதையை தேர்வு செய்தி ருப்பது துணிச்சல் முயற்சி.
டைட்டில் கார்டு முடிந்தவு டன் நேரடியாக கதைக்குள் சென்றுவிடுகிறது காட்சிகள். கடவேரி காட்டு பகுதியாக தலக்கோணம் அடர்ந்த காட்டு பகுதி பயமுறுத்தும் காட்சி களுக்கு கைகொடுத்திருக் கிறது.
மனிதர்களை கொன்று தின்னும் காட்டுவாசிகள் கதையாக இருக்குமோ என்று எண்ணினால் கொடூர குணம் படைத்த அவர்கள் ஒரு ஆராய்ச்சிக்காக காட்டுக்கு சென்று அங்கு மாமிசம் திண்ணும் ஒரு செடியின் பாதிப்பில் இப்படி ஆனவர் கள் எனறு ப்ளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது.
முதல் பாதி மட்டுமல்லாமல் கடைசிவரையிலும் யோகி பாபுவும், கருணாகரனும் காமெடி செய்து டென்ஷ னை குறைக்கிறார்கள். காட்டு பங்களாவுக்கு பெயின்ட் அடிக்கவும் ரிப்பேர் செய்யவும் வந்தவர்கள் ஆரம்பத்திலேயே ரத்த கறையுடன் வந்து பிரவின், சுனைனா கூட்டத்தை மிரட்டி கதையை தொடங்கி வைக்கின்றனர்.
யோகிபாபு, கருணாகரனை கண்டு சுனைனா மிரள்வது அடிக்கடி மயக்கம்போட்டு விழுவதுமாக இருப்பதும் ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் அப்பாவிகள் என்று தெரிந்து அவர்களுடனேயே தங்குவதுமாக பொழுதை கழிக்க சுனைனாவின் நண்பர் களோ யோகிபாபு, கருணா கரனிடமிருந்து சுனானாவை காப்பாற்ற முயற்சிப்பதும் பிறகு அவர்களை கண்டு மிரண்டு ஓடுவதுமாக காமெடி செய்கின்றனர். முதல்பாதி கலகலப்பாக நகர்கிறது
மனிதர்களை கொன்று தின்னும் அந்த கோர முகத் துடன் வருபவர்கள் உடம் பெல்லாம் ரத்தகறையாக வந்து திகில் கிளப்புகின்றனர். ஒவ்வொருவரையாக அவர்கள் சாகடிப்பது திடுக்கிட வைக்கி றது.
பிரவின், சுனைனா உள்ளிட்ட எல்லோருமே பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றனர். ஒரு சிலர் இறந்து கிடக்கும் போது அவர்களை பார்த்து யோகிபாபு கமெண்ட் அடிப் பதை தவிர்த்திருக்கலாம் அது காட்சியின் கனத்தை குறைத்து விடுகிறது.
உதயஷங்கரின் ஒளிப்பதிவு காட்சிகளில் பிரமாண்டத்தை காட்டுகிறது. சில காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு படமாகி இருக்கிறது. சித்துகுமார் இசையும் ஒரு சில காட்சி களை அதிர விடுகிறது. டென்னிஸ் மஞ்சுநாத் படத்தை பேய் கதையாக மாற்றாமல் பயோ சைன்ஸ் அடிப்படையில் கையாண்டிருப்பது புத்திசாலித்தனம்.
’ட்ரிப்’ பேய் இல்லாமல் திகிலூட்டுகிறது.