தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வரும் ராஜ கண்ணப்பன் துறை திடீரென்று மாற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள் ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.
முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதியைன் குறிப்பிட்டு கூறி விமர்சித்ததாக நேற்று புகார் எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.